துளசியில் மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல நோய்களை இவை குணமாக்கும். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூட இதை ஒப்புக் கொண்டுள்ளனர். தினமும் 10 துளசி இலைகளை ஒருவர் தினமும் தின்பதால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் அண்டாது. மார்பு, தொண்டை வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
தினமும் துளசி இலை உண்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். இது உடலுக்கான கிருமி நாசினியாக செயல்படுகிறது. துளசி இலையை ஒரு செம்பு பாத்திரத்தில் கைபிடி அளவு போட்டு ஊறவைத்து அதை பருகினால் நீரழிவு வியாதி கூட கட்டுக்குள் இருக்குமாம். வெறும் வயிற்றில் இதை 48 நாட்கள் செய்தால் பல நோயும் அண்டாது.
சருமத்தில் உள்ள படை, சொரி போன்ற நோய்களை கூட துளசி குணம் பெற செய்யும். துளசி இலையுடன், எலுமிச்சை சாறு விட்டு மையாக அரைத்து அதனை சருமத்தில் தடவி வந்தால் படை சொரி விலகும். சிறுநீர் தொடர்பான பிரச்சனை உடையவர்கள் துளசி விதையை அரைத்து உண்ண வேண்டும். அதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீரும் அருந்தி வர பிரச்சனை சரியாகும்.