Water Heater Maintenance Tips: குளிர்காலத்தில் வாட்டர் ஹீட்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், குளிக்கும்போது ஸ்விட்சை ஆன் செய்வது போன்ற தவறுகளால் ஏற்படும் ஆபத்துகளை இந்த செய்தி விளக்குகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் கிராமம் முதல் நகரம் வரை பெரும்பாலானா வீடுகளில் வாட்டர் ஹீட்டர் (Geysers) பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்டர் ஹீட்டர் வந்த பிறகு குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது எளிதாக மாறிவிட்டது என்றாலும், அதை நாம் பயன்படுத்தும் போது கவனமாக இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே, இந்த செய்தியில் பாத்ரூமில் இருக்கும் வாட்டர் ஹீட்டர் சரியாக பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
26
ஸ்விட்சை ஆன் செய்து குளிக்க கூடாது
பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் குளிக்கும்போது வாட்டர் ஹீட்டர் ஆன் செய்து குளிப்பது தான். இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தண்ணீர் சூடான பிறகு ஹீட்டரை ஆப் செய்து குளிப்பது தான் சரியான வழிமுறையாகும். மேலும் இப்படி செய்தால் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
36
குளிக்கும் அறையில் காற்றோட்டம் அவசியம்
நீங்கள் உங்களது குளியலறையில் வாட்டர் ஹீட்டர் வைக்கிறீர்கள் என்றால் அங்கு காற்றோட்டமாக இருப்பது ரொம்ப முக்கியம். ஏனெனில் சில சமயங்களில் வாட்டர் ஹீட்டரில் இருந்து வாயுகசிவு ஏற்படும். அப்படி ஏற்படும் போது குளியலறையில் காற்றோட்டம் இல்லை என்றால் உள்ளே குளிக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குளியலறை ஜன்னலை எப்போதும் திறந்து வையுங்கள் அல்லது ஒரு எக்ஸாட் ஃபேனை பொருத்த வேண்டும்.
சூடான நீரை விரைவில் பெற ஹீட்டர் வெப்பநிலையை அதிகமாக்குகிறார்கள். ஆனால் இப்படி செய்வது ரொம்பவே ஆபத்தானது. ஏனெனில் சில சமயங்களில் இதனால் வாட்டர் ஹீட்டர் வெடிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாட்டர் ஹீட்டரின் வெப்பநிலையை எப்போதுமே நடுநிலையில் வைப்பதே சிறந்தது.
56
கசிவை சரிப்பார்க்கவும்
வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் கசிந்தாலோ அல்லது ஹீட்டரை ஆன் செய்யும்போது தீப்பொறி ஏற்பட்டாலும் உடனே அதை சரி செய்ய வேண்டும். அப்போது தான் ஆபத்துகள் ஏதேனும் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
66
வாட்டர் ஹீட்டரை பொருத்தும் இடம்
குளியலறையில் வாட்டர் ஹீட்டர் வைக்கப் போகிறீர்கள் என்றால் அதை எப்போதும் மேற்பரப்பில் பொருத்துங்கள். அப்போதுதான் குளிக்கும் போது வாட்டர் ஹீட்டர் மேல் தண்ணீர் படாது. ஒருவேளை தண்ணீர் வாட்டர் ஹீட்டர் மேற்பட்டால் அது விரைவில் சேதமடையும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.