மழைக்காலம் வந்தாலே காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகரித்துவிடும். இதனால் தலைமுடி சீக்கிரமாகவே வறண்டு, சிக்கு விழுந்து, பொலிவிழந்து காணப்படும். இந்த பருவமழைக் காலத்தில் உங்கள் கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க சில எளிய வழிகள்:
ஈரப்பதம் காரணமாக உச்சந்தலையில் எண்ணெய் பசை அதிகமாகும். ஆனால், முடியின் நுனிகள் வறண்டு போகும். இதற்கு ரசாயனங்கள் குறைந்த 'சல்பேட் இல்லாத' மென்மையான ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இது கூந்தலின் இயற்கையான ஈரப்பதத்தை உறிஞ்சாமல், தேவையில்லாத எண்ணெய் மற்றும் அழுக்கை மட்டும் நீக்கும்.
25
கண்டிஷனர் போட மறக்காதீர்கள் :
தலைமுடிக்கு கண்டிஷனர் போடுவது காற்றில் உள்ள ஈரப்பதத்தால் முடி சுருள்வதைத் (Frizz) தடுக்கும் ஒரு அரணாக செயல்படுகிறது. ஷாம்பு போட்ட பிறகு, முடியின் நடுப்பகுதியில் இருந்து நுனி வரை கண்டிஷனர் தடவி அலச வேண்டும். இது கூந்தலை மென்மையாக்கி, சிக்கு விழுவதைக் குறைக்கும்.
35
ஹேர் சீரம் பயன்படுத்துங்கள் :
தலைமுடி காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி உப்பிக் கொள்ளாமல் இருக்க 'ஹேர் சீரம்' (Hair Serum) சிறந்த தீர்வு. குளித்து முடித்து தலைமுடி லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது அல்லது காய்ந்த பிறகு, சில துளிகள் சீரம் தடவினால் முடி பளபளப்பாக மாறும். இது முடியின் மேல் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது.
மழைக்காலத்தில் முடியை விரித்துப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. லேசான பின்னல், கொண்டை அல்லது போனிடெயில் போன்ற ஹேர் ஸ்டைல்களை தேர்வு செய்யலாம். இதனால் கூந்தல் காற்றில் உள்ள ஈரப்பதத்தோடு நேரடியாகத் தொடர்பு கொள்வது குறைந்து, முடி உடைவது மற்றும் சிக்கு ஏற்படுவது தடுக்கப்படும்.
55
ஹீட் ஸ்டைலிங் கருவிகளைத் தவிருங்கள் :
ஸ்ட்ரெய்ட்னர் (Straighteners), கர்லர் (Curling irons) அல்லது ப்ளோ டிரையர் போன்ற வெப்பமூட்டும் கருவிகளை இந்த காலத்தில் அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். இது முடியை மேலும் பலவீனமாக்கிவிடும். இயற்கையான காற்றிலேயே முடியை உலர வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில், வெப்பத்தைக் குறைத்து 'ஹீட் ப்ரொடெக்டிவ்' ஸ்ப்ரே பயன்படுத்திவிட்டு உபயோகிக்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.