
சமையலறை வீட்டின் ஒரு முக்கியமான இடமாகும். இங்குதான் எல்லாவிதமான உணவுகளும் முழு மனதுடன் சமைக்கப்படுகிறது. எனவே சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இருப்பினும் சில சமயங்களில் எவ்வளவு தான் சமையல் அறையை சுத்தமாக வைத்தாலும் சில பொருட்களை சுத்தம் செய்வது கஷ்டமாக இருக்கும். அது வேறறெதுமில்லை சமையலறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மசாலா டப்பாக்கள் தான். பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றாலும் இன்று பலரது வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
சமையலறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களில் சீக்கிரமாகவே கிரீஸ் மற்றும் எண்ணெய் கறை படிந்து நிறம் மாறிவிடும். மேலும் அவற்றை சுத்தம் செய்வதற்கும் மிகவும் கடினமாகவும் இருக்கும். அந்த வகையில் உங்கள் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் பிளாஸ்டிக் மசாலா டப்பாவை சுத்தம் செய்வதற்கான முயற்சியில் நீங்கள் ரொம்பவே சோர்ந்து போய்விட்டீர்களா? அதை சுலபமாக சுத்தம் செய்ய சில குறிப்பகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை எண் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சோப்பு சுத்தம் தரும்.. ஆனா இந்த '6' பொருள்களை சோப்பு போட்டு கழுவினால் பாதிப்பு வரும்!!
சமையலறையில் இருக்கும் பிளாஸ்டிக் மசாலா டப்பாவை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ்:
அரிசி தண்ணீர்:
அரிசி தண்ணீர் சரும மற்றும் தலை முடிக்கு ரொம்பவே நல்லது என்று நம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அரிசி நீரை கொண்டு சமையலறையில் இருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் படிந்திருக்கும் கறையை சுலபமாக சுத்தம் செய்து விடலாம் தெரியுமா? இதற்கு சூடான அரிசி நீர் கொண்டு எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கும் பிளாஸ்டிக் டப்பாவை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் பிளாஸ்டிக் டப்பாவில் படிந்து இருக்கும் எண்ணெய் கறை சுலபமாக அகன்று விடும்.
டூத் பேஸ்:
டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்குவதற்கு மட்டுமல்ல சமையலறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மசாலா டப்பாவையும் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம். இதற்கு டூத் பேஸ்ட்டை பிளாஸ்டிக் டப்பாவில் தடவி ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்து பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் பிளாஸ்டிக் மசாலா டப்பா புதியது போல் இருக்கும்.
எலுமிச்சை & உப்பு:
எலுமிச்சை மற்றும் உப்பு இவை இரண்டும் கறைகளை சுத்தம் செய்வதற்கு சிறந்த துப்புரவு பொருளாகும். இதற்கு எலுமிச்சை மற்றும் உப்பு இரண்டையும் நன்றாக கலந்து அதை எண்ணெய் படிந்த பிளாஸ்டிக் டப்பாவில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு ஒரு பிரஷ் கொண்டு நன்றாக தேய்த்து தண்ணீரில் கழுவினால் போதும் கறைகள் முற்றிலும் நீங்கிவிடும்.
சூடான நீர் மற்றும் பாத்திரம் கழுவும் லிக்விட்:
பிளாஸ்டிக் மசாலா டப்பாவில் படிந்து இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை சுத்தம் செய்ய சூடான நீர் மற்றும் பாத்திரம் கழுவும் லிக்விட் கலவை சிறந்தது. இதற்கு சூடான நீரில் சில துளிகள் பாத்திரம் கழுவும் லிக்விடை சேர்த்து நன்றாக கலந்து பிறகு பஞ்சை அனைத்து பிளாஸ்டிக் டப்பாவில் தடவ வேண்டும். பிறகு பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் பிளாஸ்டிக் மசாலா டப்பா பளபளப்பாக இருக்கும்.
எண்ணெய்;
இதைக் கேட்கும் போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. பிளாஸ்டிக் டப்பாவில் படிந்திருக்கும் எண்ணெய்
கறையை சுலபமாக சுத்தம் செய்துவிடலாம். இதற்கு சில துளிகள் சமையல் எண்ணெயை பிளாஸ்டிக் டப்பாவில் தடவி பிறகு ஒரு பஞ்சால் நன்கு தேய்க்க வேண்டும். பிறகு எப்போதும் போல பாத்திரம் கழுவும் லிக்விட் மற்றும் சூடான நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் பிளாஸ்டிக் மசாலாவில் படிந்து இருக்கும் எண்ணெய் கறைகள் முற்றிலும் நீங்கிவிடும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் சமையலறையை மொய்க்கும் கொசுக்கள், ஈக்கள்... வராமல் தடுக்க சூப்பர் டிப்ஸ்!!