
தற்போது மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கத்தால் ஏராளமானோருக்கு சர்க்கரை நோய் வருவது சகஜம் ஆகிவிட்டது. இந்த நோய் வந்துவிட்டால் அதை குணப்படுத்துவது கடினம். முக்கியமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் உடலில் பிற உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுதவிர, சர்க்கரை நோயால் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுபோல சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைந்து விடுகிறது. ஆனால், இது நல்லதல்ல. இருப்பினும் சரியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தால் ரத்த சர்க்கரையை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம்.
அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக்கூடாது? என்றும், எதைக் குடித்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி விடலாம் என்ற கேள்வி மனதில் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் டீ, காபி, சோடா போன்ற பானங்களை குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். இத்தகைய சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கான இயற்கையான ஸ்பெஷல் ட்ரிங்க்ஸ் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் சத்துக்கள் அதிகம் உள்ளது மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும். இப்போது சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு ஏன் வேகமாக உயருகிறது? எப்படி கட்டுப்படுத்தலாம்? டாக்டர் சிவபிரகாஷ் விளக்கம்!
பாகற்காய் ஜூஸ்:
பாகற்காய் ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப் பிரசாதம் ஆகும். இதில் இருக்கும் பண்புகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போதுமான அளவு உள்ளது. மேலும் இதில் மிகவும் குறைந்த அளவு கொழுப்பு, கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஜூஸ் ரொம்பவே நல்லது. நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடித்து வாருங்கள்.
எலுமிச்சை நீர்:
சர்க்கரை நோயாளிகளுக்கு எலுமிச்சை நீர் பல அருகே நன்மைகளை வழங்கும். ஏனெனில் ஊட்டச்சத்துக்கள் இருந்த பானங்களில் இதுவும் ஒன்றாகும். எலுமிச்சை நீர் உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நன்மை பயக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் எலுமிச்சை நீர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
நெல்லிக்காய் ஜூஸ்:
சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமான அமைப்பு பலப்படுத்தவும் உதவுகிறது. முக்கியமாக கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது. நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம். எனவே தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
இதையும் படிங்க: மாத்திரை சாப்பிட்டும் 'சுகர்' குறையலயா? 2 கொய்யா இலை வைச்சு குறைக்க சூப்பர் டிப்ஸ்!!
வெந்தய தண்ணீர்:
வெந்தய தண்ணீர் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு எனர்ஜி ட்ரிங்க் ஆகும். இந்த ட்ரிங்க் ரத்த சர்க்கரையை சாதாரண அளவில் வைத்திருக்க உதவுகிறது. சொல்லப் போனால் வெந்தயம் விதை மற்றும் வெந்தய தண்ணீர் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதற்கு சர்க்கரை நோயாளிகள் இரவு ஒரு கிளாஸில் வெந்தயத்தை ஊற வைத்து பிறகு மறுநாள் காலை வெந்தய விதையுடன் நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
வெள்ளரி ஜூஸ்:
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் வெளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி இதில் அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது. எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் வெள்ளரி ஜுஸ் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி உடலில் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்படாது. இதுதவிர, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேற்றப்படும்.