
பொதுவாக குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று காரணமாக தோலில் ஈரப்பதம் இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக தோல் வறண்டு காணப்படும் மற்றும் உயிரற்றதாக இருக்கும். மேலும் குறைந்த அளவு தண்ணீர் குடித்தாலும் இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும். வறண்ட சருமத்தால் தோலில் அரிப்பு, நீட்சி, மற்றும் மெல்லிய திட்டுகள் வருவது பொதுவானது. எனவே இதை தடுக்க சூடான நீரில் குளிப்பது, மாய்ஸ்சரைசர் தடவுவது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இதனுடன் சில ஸ்பெஷல் பானங்கள் குடிப்பதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க முடியும் மற்றும் சருமமும் பளபளப்பாக இருக்கும். இத்தகைய
சூழ்நிலையில், குளிர்காலத்தில் சருமத்தை பளபளப்பாக வைக்க வேண்டிய சில ஸ்பெஷல் பானங்கள் பற்றி இங்கு காணலாம்.
எலுமிச்சை மற்றும் தேன்:
குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை பளபளப்பாக மாற்ற எலுமிச்சை பழம் மற்றும் தேன் கலந்த நீரை குடிக்க தொடங்குங்கள். ஏனெனில் எலுமிச்சை வைட்டமின் சி யின் நல்ல ஆதாரமாகும். எனவே சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் சருமம் ஹைட்ரேட் செய்வது மட்டுமின்றி, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும்.
கற்றாழை சாறு:
கற்றாழை சாற்றை குளிர்காலம் அல்லது கோடைகாலம் என எந்த பருவத்திலும் குடிக்கலாம். ஏனெனில் இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி கரைகளையும் நீக்க உதவுகிறது. முக்கியமாக கற்றாழை சாற்றை தினமும் குடித்து வந்தால் சரும ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, உடலில் பல பிரச்சனைகளும் சரியாகும்.
இதையும் படிங்க: இதை ட்ரை பண்ணுங்க! எந்த க்ரீமும் இல்லாமலே உங்க முகம் பளபளன்னு மின்னும்!
கிரீன் டீ:
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்க பால் டீக்கு பதிலாக க்ரீன் டீ குடிக்க பழகுங்கள். இது சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கும் பல நன்மைகளை வாரி வழங்கும். ஏனெனில் இதில் போதுமான அளவு ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது சருமத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, எடை இழப்புக்கும் பெரிதும் உதவுகிறது.
தேங்காய் தண்ணீர்:
பொதுவாக குளிர்காலத்தில் தேங்காய் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல என்று சொல்வார்கள் ஆனால் தேங்காய் நீர் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே இதை உங்களது அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது மட்டுமின்றி, உங்களது உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் முகத்தில் தேன் தடவுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ!
மஞ்சள் கலந்த பால்:
மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சருமத்திற்கு உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குடித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறையும் மற்றும் சருமத்தின் நெகிழ்ச்சியையும் அதிகரிக்க செய்யும்.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட் ஜூஸில் இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் இவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வது மட்டுமல்லாமல், சருமத்தை ஆரோக்கியமானதாகவும் மாற்றுகிறது.