
பொதுவாகவே பச்சை இலை காய்கறிகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சொல்லப்போனால் அவை ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரமாகும். கீரையும் அவற்றில் ஒன்றாகும். கீரையில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் அதன் ஊட்டச்சத்துகளுக்கு பெயர் பெற்றது. தற்போது குளிர் காலம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் கீரைகளை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு இந்திய வீட்டின் மெனுவிலும் கண்டிப்பாக கீரை இடம்பெறும். கீரையில் போதுமான அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, குளோரின், புரதம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
தினமும் கீரை சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் ரத்த சோகை பிரச்சனை இருக்காது. அந்தவகையில் கீரையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும் குளிர்காலத்தில் அதை அதிகமாக சாப்பிடக் கூடாது என்று சொல்லுகின்றன. இல்லையெனில் உடலுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். எனவே குளிர்காலத்தில் கீரையை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதையும், எந்தெந்த நபர்கள் அதை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் என்பதையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் கீரை சாப்பிடலாம்.. ஆனா 'இரவில்' மட்டும் சாப்பிடக்கூடாது தெரியுமா?
தாது பற்றாக்குறை:
கீரையில் இருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் அதன் இயல்பை மீறும் போது அது உடலில் உள்ள மற்ற தாதுக்களை உறிஞ்சும் திறனை பாதிக்கிறது. மேலும் இந்த அமிலம் மெக்னீசியம் கால்சியம் துத்தநாகத்துடன் பிணைந்து உடலில் தாது பற்றாக்குறையை ஏற்படுத்தும். மேலும் ஆரோக்கியத்தையும் மோசமாகும்.
சோம்பல் ஏற்படும்:
குளிர்காலத்தில் கீரையை அதிகமாக சாப்பிடும் போது அது உடலில் சோர்வை ஏற்படுகிறது. அதாவது, அதிகளவு கீரை சாப்பிடுவதால், ஒரு நபர் தனது சக்தியை இழக்க நேரிடும். இதனால் நாள் முழுவதும் சோம்பலாகவே இருப்பார்.
இதையும் படிங்க: முட்டையை தனியா சாப்பிடுறீங்களா? கீரையுடன் சேர்த்து சமைத்தால் எவ்ளோ சத்து கிடைக்கும் தெரியுமா?
வயிற்று பிரச்சனைகள்:
கீரையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குளிர்காலத்தை இதை அதிகமாக சாப்பிடும்போது வாயு, வயிற்றுப் பிடிப்புகள், வீக்கம் போன்ற வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுதவிர, செரிமானத்தையும் மோசமாக பாதிக்கும்.
ஒவ்வாமை:
கீரையில் ஹிஸ்டமைன் உள்ளன. இது உடலில் சில செல்களில் காணப்படும் ஒருவிதமான ரசாயனம். சமயங்களில் இது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் மற்றும் உடலை மோசமாக பாதிக்கும். எனவே குளிர்காலத்தில் கீரையை அதிகமாக சாப்பிட வேண்டாம்.
கீரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
- சிறுநீரகத்தில் கல் பிரச்சனை உள்ளவர்கள் கீரையை சாப்பிட வேண்டாம். ஏனெனில் இந்த பிரச்சனை உள்ளவர்கள் கீரையை அதிகம் சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆக்சாலிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகிவிடும். பிறகு அதை உடலில் இருந்து வெளியேற்றுவது மிகவும் கடினம். மேலும் அது சிறுநீரகத்தில் குவிய தொடங்கும். இது சிறுநீரக கல் பிரச்சனையை மேலும் மோசமாக்கும்.
- மூட்டு வலியால் அவதிப்படுபவர்களும் குளிர்காலத்தில் கீரை சாப்பிட வேண்டாம். ஏனெனில் இதில் இருக்கும் ஒரு வகையான தனிமம் கீழ்வாதத்தை தூண்டும். இதனால் மூட்டு வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் இந்த பிரச்சினையுள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக கீரையை சாப்பிட்டால் உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
- இது தவிர சர்க்கரை நோயாளிகள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், செரிமான பிரச்சனை உள்ளவர்கள், சில நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் போன்றோர் குளிர்காலத்தில் கீரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.