வெயிலிலும் தூசியிலும் அலைந்து தலைமுடி எண்ணெய் பிசுபிசுப்புடனும், அழுக்கோடும் சோர்ந்து போய்விட்டதா? ஷாம்பு போட்டு குளித்த அடுத்த நாளே மீண்டும் எண்ணெய் வழிகிறதா? இந்த 5 வழிகளை டிரை பண்ணி பாருங்க.
தக்காளியில் உள்ள இயற்கையான அமிலத் தன்மை (Acidic property), தலையின் பிஹெச் (pH) அளவை சமன் செய்து அதிகப்படியான எண்ணெய் சுரப்பதைத் தடுக்கிறது. ஒரு தக்காளியின் சாற்றை மட்டும் எடுத்து தலையின் வேர்க்கால்களில் நன்றாகத் தடவி 10 நிமிடம் ஊற வையுங்கள். பிறகு சாதாரண தண்ணீரில் அலசினால் எண்ணெய் பிசுக்கு காணாமல் போகும்!
25
கிரீன் டீ டோனர்
கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலையில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன், ஸ்கால்ப்பை (Scalp) புத்துணர்ச்சியாக வைக்கும். கிரீன் டீ போட்டு அதை நன்றாக ஆற வையுங்கள். தலையை சாதாரணமாகக் கழுவிய பின், இறுதியாக இந்த கிரீன் டீ தண்ணீரைக் கொண்டு தலையை அலசுங்கள். இது ஒரு நேச்சுரல் அஸ்ட்ரிஜென்ட் (Astringent) போல வேலை செய்து பிசுபிசுப்பை உடனடியாகக் குறைக்கும்.
35
அரிசி வடித்த கஞ்சியும் எலுமிச்சையும்!
சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை கலக்குங்கள். கஞ்சியில் உள்ள மாவுச்சத்து (Starch) தலையின் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும்; எலுமிச்சை அழுக்கை நீக்கும். இந்த கலவையை தலையில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து விட்டு குளியுங்கள். முடி பட்டுப்போல சாஃப்ட் ஆகவும் மாறும், பிசுபிசுப்பும் ஓடிவிடும்.
திடீரென வெளியே செல்ல வேண்டும், ஆனால் தலை பயங்கர எண்ணெய் பிசுக்காக இருக்கிறது என்றால் இந்த டிப் உங்களுக்குத்தான். உங்கள் கிச்சனில் இருக்கும் சோள மாவை (Cornstarch) சிறிதளவு எடுத்து, முடியின் வேர்க்கால்களில் பவுடர் போல தூவி, சீப்பால் நன்றாக வாரிக் கொள்ளுங்கள். மாவு எல்லா எண்ணெயையும் உறிஞ்சிக்கொண்டு, ஜஸ்ட் 2 நிமிடத்தில் ஷாம்பூ போட்டு குளித்தது போன்ற லுக் தரும்!
55
கற்றாழை மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஸ்ப்ரே
பிரஷ்ஷான கற்றாழை ஜெல்லுடன் (Aloe Vera) ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். குளிப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்னால் இதைத் தலையில் நன்றாக ஸ்ப்ரே செய்து விட்டு, பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு அலசுங்கள். வாரா வாரம் சேரும் பிசுபிசுப்பு, பொடுகு, அழுக்கு மொத்தத்திற்கும் இது எண்ட் கார்டு போடும்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.