Clean Cooking Oil Bottle : வெறும் 5 நிமிடத்தில் எண்ணெய் பாட்டில் பிசுபிசுப்பை சுத்தம் செய்ய டிப்ஸ்!!

Published : Jul 09, 2025, 11:32 AM IST

எண்ணெய் பாட்டில் பிசுபிசுப்பை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

PREV
15

பொதுவாக நம் எல்லார் வீட்டு சமையலறையிலும் அடுப்புக்கு பக்கத்திலேயே எண்ணெய் பாட்டில் வரிசையாக அடுக்கி வைத்திருப்போம். அப்போதுதான் சமைக்கும் போது பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும். ஆனால் இந்த பாட்டில்கள் மீது நாம் சமைக்கும்போது அல்லது தாளிக்கும் போது அதிலிருந்து தெறிக்கும் எண்ணெய் படிந்து கொண்டே இருக்கும். நாள்பட நாள்பட பாட்டிலின் மீது படும் எண்ணெயானது விடாப்பிடியான கறையாகவும், பிசுபிசுப்பாகவும் மாறிவிடும்.

25

இதுபோன்ற சூழ்நிலையில் அதை அவ்வப்போது சுத்தம் செய்வது ரொம்பவே முக்கியம். இல்லையெனில், அது பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக மாறிவிடும். சில சமயங்களில் எண்ணெய் பாட்டில் மீது குவிந்திருக்கும் கிரீஸ் ரொம்பவே பிசுபிசுப்பாக இருப்பதால் எந்த வகையிலும் சுத்தம் செய்யவே முடியாது. ஆனால் இந்த பதிவில் எண்ணெய் பாட்டிலில் படிந்திருக்கும் விடாப்படியான கறையை எந்தவித கஷ்டமும் இல்லாமல் மிகவும் எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம். முக்கியமாக தண்ணீர் மற்றும் சோப்பு இல்லாமலேயே பாட்டிலில் குவிந்திருக்கும் கிரீஸை அகற்றிவிடலாம். அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

35

கோதுமை மாவு : எண்ணெய் பாட்டிலில் பதிந்திருக்கும் பிசுபிசுப்பை போக்க கோதுமை மாவு சிறந்த தேர்வாகும். இதற்கு கோதுமை மாவை எண்ணெய் பாட்டில் முழுவதும் நன்றாக தடவ வேண்டும். சுமார் 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு மாவை நன்றாக தேய்க்க வேண்டும். இப்போது ஒரு பருத்தி துணை உதவியுடன் பாட்டிலை சுத்தம் செய்து பார்த்தால், பாட்டிலில் குவிந்துள்ள கிரீன் உச்சிலும் நீங்கிவிடும்.

45

கடலை மாவு : சமையலறையில் இருக்கும் எண்ணெய் பாட்டிலில் பிடிவாதமான கறை இருந்தால் தண்ணீர் ஏதும் ஊற்றாமல் கடலை மாவை பாட்டிலில் நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி நீங்கள் தேய்க்கும் போது கிரீஸ் ஆனது கடலை மாவுடன் சேர்ந்து வந்துவிடும். பிறகு மீண்டும் கொஞ்சமாக கடலை மாவுடன் சமஅளவு அரிசி மாவு கலந்து பாட்டிலில் நன்றாக தேய்க்க வேண்டும். கடலை மாவு எண்ணெய் பசையை ஈர்க்கும். அரிசி மாவு ஸ்க்ரப்பர் போல செயல்படும். வேண்டுமானால் தண்ணீரை கொண்டு பாட்டிலை கழுவலாம்.

55

ரவை : கிச்சனில் இருக்கும் எண்ணெய் பாட்டிலை சுத்தம் செய்ய ரவை உங்களுக்கு உதவும். இதற்கு ரவையில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதை பாட்டிலின் முழுவதும் தடவ வேண்டும். பிறகு ஒரு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி அதில் பாத்திரம் கழுவும் லிக்விட் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது இந்த தண்ணீரில் எண்ணெய் பாட்டிலை வைக்க வேண்டும். ஸ்க்ரப்பரால் பாட்டிலை சுத்தம் செய்ய வேண்டும். இப்போது உங்களது பாட்டில் சுத்தமாகி புதுசு போல பளபளக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories