போதுமான உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுப் பழக்கம், அதிக மன அழுத்தம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது போன்ற காரணங்களால் உடல் பருமன் என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே பலரின் இலக்காக உள்ளது.
வெயிட் லாஸ் பயணத்தில் முறையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான டயட் மூலம் ஒட்டுமொத்த உடல் எடையை கூட எளிதில் குறைக்கலாம். ஆனால் தொப்பை கொழுப்பை குறைப்பது பலருக்கும் சவாலான பணியாக இருக்கும். வயிற்றைச் சுற்றி கொழுப்பை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், சில நேரடியான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் கவனத்துடன் கூடிய பழக்கவழக்கங்கள் மூலம், நீங்கள் தொப்பையை குறைக்கலாம். எனவே இந்த பதிவில் பிடிவாதமான தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் சில பயனுள்ள டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காலை பானம்
வீட்டில் தயாரிக்கப்பட்ட காலை பானங்கள் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் கொழுப்பை எரிப்பதை துரிதப்படுத்தவும் உதவும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுடன் இணைந்தால், அவை சிறந்த பலன்களை அளிக்கின்றன. உதாரணமாக எலுமிச்சை தேன் நீர்: ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அரை டீஸ்பூன் தேன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து நல்ல பலன்கள் கிடைக்கும்.