
இந்திய மக்களைப் பொருத்தவரை ஒரு பொருளை பல்வேறு விதமாக பயன்படுத்துவதில் வல்லவர்கள். தூக்கி எறிய வேண்டிய பொருளையும் கூட வீணாக்காமல் அதை மற்றொரு பயன்பாட்டுக்கு மாற்றி வைத்து விடுவார்கள். அந்த வகையில் செல்போன் கவரை போனுக்கு உறையாக மட்டும் பயன்படுத்தாமல், மினி பர்ஸ் போல பலர் பயன்படுத்தி வருகின்றனர். வெளியே செல்லும்போது சிலர் பர்ஸை தனியாக ஏன் எடுத்து செல்ல வேண்டும் என நினைத்து இப்படி செய்கிறார்கள்.
செல்போன் கவரில் ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு தேவைப்படும் போது அந்த கவரை கழற்றி எடுத்துக் கொள்வார்கள். இதனை இளம்தலைமுறையினர் முதல் முதியோர் வரை பலரும் செய்து வருகின்றனர். ஆனால் இப்படி செய்வது பாதுகாப்பான முறையல்ல. ஏனென்றால் செல்போன்கள் கூட இப்போது பாதுகாப்பானது அல்ல. செல்போன்கள் திடீரென வெடிப்பது இப்போது சகஜமாகி வருகிறது. இந்த நிலையில் ரூபாய் நோட்டுகளையும் செல்போனுக்கு அடியில் வைப்பதால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நிகழலாம்.
செல்போன் கவருக்கு பின்னால் பணத்தை வைப்பதால் என்ன ஆபத்து என்று தோன்றுகிறதா? செல்போன் திடீரென தீப்பற்ற அதுவே காரணமாக அமையலாம். செல்பொன் கவரில் இந்திய ரூபாய் நோட்டுகளை வைப்பது குறிப்பிட்ட நேரங்களில் தீ விபத்துக்கு இட்டுச் செல்லும். இதற்கான சில காரணங்களை இங்கு காணலாம்.
இந்திய ரூபாய் நோட்டுகளை (₹), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தயாரிக்கிறது. இதனை நாடு முழுவதும் பல்வேறு பாதுகாக்கப்பட்ட அச்சகங்கள் மூலம் தயாரிக்கிறார்கள். செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL), பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL), பேங்க் நோட் பேப்பர் மில் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BNPM) ஆகியவை மூலம் இந்திய பணம் அச்சடிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Mobile Theft : செல்போன் தொலைஞ்சு போனா உடனே நீங்க செய்ய வேண்டிய 3 விஷயங்கள் இதுதான்..
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா (RBI) தான் நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை வடிவமைப்பு செய்கிறது. ரூபாய் நோட்டுகள் சாதாரண காகிதங்களால் அச்சடிக்கப்படுவதில்லை. இதற்கென பிரத்யேகமாக காகிதம் தயாரிக்கப்படுகிறது. உரு செதுக்குதல் என்ற இன்டாக்லியோ (intaglio) அச்சிடும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பிறகே ரூபாய் நோட்டுகள் தனித்தனியாக வெட்டப்படுகின்றன.
ரூபாய் நோட்டில் உள்ள குறிப்புகளின் தரம், நம்பகத்தன்மை ஆகியவற்றுக்காக பரிசோதிக்கப்படுகின்றன. இதன் பின்னர் நோட்டுகள் பேக் செய்யப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்திய ரூபாய் நோட்டுகளில் வாட்டர்மார்க், மைக்ரோ பிரிண்டிங், ஹாலோகிராம், நிறத்தை மாற்றும் மை, எதிர்ப்பு ஸ்கேனிங் அம்சம், பாதுகாப்பு அம்சம், பதிவு மூலம் பார்க்கும் வசதி ஆகியவை உள்ளன.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இரசாயனங்கள் கள்ளநோட்டைத் தடுக்கவும், நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்யவும்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் சில இரசாயனங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு இழைகள் (Security Threads) :
இந்திய ரூபாய் நோட்டுகளில் பாலியஸ்டர் அல்லது பருத்தி இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. யூரோபியம் போன்ற ஒளிரும் சாயங்கள் ரூபாய் நோட்டுகளின் வண்ணமயமான தோற்றத்துக்கு காரணமாக உள்ளன. இவை காந்தப் பண்புகளுடன் ரூபாய் நோட்டுகளில் செலுத்தப்படுகின்றன.
வாட்டர்மார்க் (watermark):
இந்திய ரூபாய் நோட்டுகள் பிரத்யேக காகிதத்தால் தயாரிக்கப்பட்டவை என முன்பே குறிப்பிட்டது போல, அது டைவெக் (பாலிஎதிலீன்) அல்லது அதை மாதிரியான பொருட்களால் தயாரிக்கப்பட்ட காகிதமாகும்.
மை (Ink):
நாம் பொதுவாக பயன்படுத்தும் மை போன்று அல்லாமல் சூரியனிலிருந்து வெளியேறும் அகச்சிவப்பு, புற ஊதாக்கதிர்களை உறிஞ்சும் வகை மையை தான் ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்துவார்கள். இந்த மையானது ஐஆர் என அகச்சிவப்பு கதிரை உறிஞ்சும் மை. அதே நேரத்தில் யூவி என சொல்லப்படும் புற ஊதா கதிர்களுடன் எதிர்வினை புரியும் மையாகும். இந்த சமயங்களில் நிறத்தை மாற்றக்கூடிய மை.
காகிதம்:
மரக்கூழிலிருந்து செய்யப்படாமல் பருத்தி அடிப்படையிலான காகிதத்தில் தான் தயாரிக்கிறார்கள். இதனை அளவிட ஜெலட்டின், ஸ்டார்ச் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
மற்ற பொருள்கள்:
இந்திய ரூபாய் நோட்டுகளில் கால்சியம் கார்பனேட், டால்க் கலந்துள்ளன. நுண்ணுயிர் எதிர்ப்பு முகவர்களாக வெள்ளி நானோ துகள்கள் சேர்க்கப்படுகின்றன. அதனுடன் பாலி அக்ரிலாமைடுகள் கூட சேர்க்கப்படுகின்றன.
ஸ்கேனிங் எதிர்ப்பு அம்சம்:
பணத்தை ஸ்கேன் செய்வதைத் தடுக்க மைக்ரோ பொருள்களுடன் இரும்பு ஆக்சைடு, கார்பன் போன்ற இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன. இது தவிரவும் 10க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் இந்திய ரூபாய் நோட்டு தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்த ரசாயனங்களில் சில நேரங்களில் செல்போன் தீப்பிடிக்க காரணமாக அமையலாம். இது தவிரவும் சில காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
மின்சாரம் பாயலாம்:
தற்போது வெளியிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுகளால் நிலையான மின்சாரத்தை உருவாக்க முடியும். ரூபாய் நோட்டில் உள்ள கார்பன் மாதியான ரசாயனம் எரிதலுக்கு உதவும். அதனால் பணத்தை செல்போனுக்கு அடியில் வைப்பது நல்லதல்ல. கட்டாயம் தவிருங்கள்.
வெப்பம்:
நீங்கள் செல்போனை சார்ஜிங் செய்யும்போது, அதிகமாக பயன்படுத்தும்போது ப்ராசசர் சூடாகும். பயன்பாட்டுக்கு ஏற்றபடி செல்போன் விரைவாக வெப்பமடைகிறது. அப்போதும் செல்போன் பணத்துடன் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.
பேட்டரி:
போன் பேட்டரிகளில் உள்ள மின்னூட்டம் காரணமாக தீப்பொறி உருவாகலாம்.
எப்படி செல்போனுக்கு அடியில் உள்ள பணம் தீப்பிடிக்கிறது?
ரூபாய் நோட்டுக்கள் தயாரிப்பில் ரசாயனங்கள் பயன்படுத்துகிறார்கள். செல்போனுக்கு அடியில் பணம் வைப்பதால் வெப்பம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. போன் அதிகமாக சூடாகும்போது பணத்தில் உள்ள ரசாயனம் வினைபுரிந்து கூட வெடிக்க வாய்ப்புள்ளது. தோற்றத்திற்காக அல்லது மலிவாக வாங்கப்படும் சில மட்டமான செல்போன் கவர்களாலும் விபத்து ஏற்படுகிறது.
என்ன செய்யக் கூடாது?
செல்போன் கவருக்கு கீழே ஒருபோதும் தீப்பற்றும் பொருள்களை வைக்காதீர்கள். முடிந்தவரை செல்போனுக்கு அடியில் எந்த பொருளையும் வைக்காமல் இருப்பதே நல்லது.
தீப்பிடிக்காமல் இருக்க செய்ய வேண்டியது?
1. மின்சாதனங்களுக்கு பக்கத்தில் ரூபாய் நோட்டுகள், நாணயம், பிற எரியக்கூடிய பொருட்களை வைக்கக் கூடாது.
2. செல்போனை எப்போதும் சுத்தமாகவும், உலர்வாகவும் வைக்க வேண்டும்.
3. அளவுக்கு அதிகமாக சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். சேதமடைந்த ஃபோன் பேட்டரிகளைப் பயன்படுத்தக் கூடாது.
4. வெப்பத்தை குறைவாக வெளியிடும் செல்போன்களை பயன்படுத்துங்கள்.
தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?
செல்போன் போன்ற மின்சாதனங்களால் தீ பற்றி எரிந்தால் தண்ணீர் ஊற்றி அணைக்கக் கூடாது. தீப்பற்றி எரியும் பொருள்கள் மீது மண் அள்ளி போடுங்கள். போடவேண்டும். தீ எரிய தேவைப்படும் ஆக்சிஜன் மணலைப் போடுவதால் தடைபடும். போதிய காற்று கிடைக்காமல் தீ அணையும்.
இதையும் படிங்க: ரொம்ப போன் பேசுரீங்களா? கொஞ்சம் Avoid பண்ண ஈஸி ஸ்டெப்ஸ் இதோ!