துபாய் வில்லாவில் தனி ராஜ்ஜியம் நடத்தும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்!

First Published | Sep 23, 2024, 10:07 AM IST

முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதி தங்கள் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு மருமகள் ராதிகா மெர்ச்சண்டுக்கு துபாய் வில்லாவை பரிசளித்தார். அந்த ஆடம்பர பங்களாவின் உள்புறத் தோற்றத்தைக் காட்டும் படங்கள் வைரலாகியுள்ளன.

Anant Ambani, Radhika Merchant Dubai villa

உலகப் பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் உலகெங்கிலும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கும். அந்த வகையில் பலரது கவனத்தையும் ஈர்த்திருப்பது துபாயில் கடற்கரையை நோக்கி அமைந்திருக்கும் பிரமாண்டமான வில்லா. இதன் மதிப்பு 650 கோடி ரூபாய்.

Anant Ambani Dubai villa

2022ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானி துபாயின் புகழ்பெற்ற பாம் ஜுமேரா பகுதியில் அமைந்துள்ள இந்த ஆடம்பரமான எஸ்டேட்டை வாங்கினார். வடக்கு பாம் ஜுமேராவில் அமைந்துள்ள வில்லாவில் 10 விசாலமான படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் இரண்டு நீச்சல் குளங்கள் உள்ளன. இந்த வில்லா இத்தாலிய பளிங்குக் கற்கள் மற்றும் நேர்த்தியான கலை வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

Tap to resize

Radhika Merchant in Dubai villa

26,033 சதுர அடி பரப்பளவில், கடற்கரையை நோக்கி அமைந்திருக்கும் இந்த வில்லா சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ. 650 கோடி) வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அம்பானி குடும்பம் இந்த ஆடம்பரமான துபாய் வில்லாவை ஒரு விடுமுறை கால இல்லமாக பயன்படுத்துகிறது.

Mukesh Ambani, Nita Ambani gift

இந்த வில்லாவில் ஆடம்பர வசதிகளுக்கு குறைச்சலே கிடையாது. உலகத்தில் இருக்கும் எல்லா சொகுசு ஏற்பாடுகளும் கொண்டதுதான் இந்த துபாய் வில்லா. குறிப்பாக, இந்த வில்லாவில் உள்ளேயும் வெளியேயும் பெரிதாக இரண்டு நீச்சல் குளங்கள் உள்ளன. இவை அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டவை.

Anant Ambani, Radhika Merchant wedding

இந்த துபாய் வில்லாவைத் தவிர, அம்பானி குடும்பம் அவர்களின் புகழ்பெற்ற மும்பை பங்களாவான ஆன்டிலியா உட்பட பல ஆடம்பரச் சொத்துகளை வைத்திருக்கிறது. ரூ.15,000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா பங்களா இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த பங்களா ஆகும்.

Anant Ambani, Radhika Merchant photos

முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் அவர்களது மகன்கள், ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோர் ஆண்டிலியா இல்லத்தில் வசிக்கின்றனர். அவர்களின் மகள் இஷா அம்பானி தனது கணவர் ஆனந்த் பிரமலுடன் மற்றொரு ஆடம்பர பங்களாவான குலிதா பங்களாவில் வசிக்கிறார்.

Latest Videos

click me!