வெயிலின் கொடுமையால் பகல், இரவு என எந்த நேரமும் ஏசியை அணைக்க முடியவில்லையா? அதே சமயம் மின்சாரக் கட்டணத்தைப் பார்த்தால் மயக்கம் வருகிறதா? கவலையை விடுங்க... இந்த ஸ்மார்ட் ஐடியாக்களை ஃபாலோ பண்ணுங்க. கரென்ட் பில் தாறுமாறாக எகிறாமல் கட்டுப்படுத்த முடியும்.
நம்மில் பலர் 18°C அல்லது 16°C-இல் வைத்தால் சீக்கிரம் குளிர்ந்துவிடும் என நினைக்கிறோம். அது தவறு! ஏசியை 24°C முதல் 26°C வரை வைப்பதுதான் மனித உடலுக்கும் நல்லது, உங்கள் பாக்கெட்டுக்கும் நல்லது. ஒவ்வொரு டிகிரி உயர்த்தும் போதும் 6% மின்சாரம் சேமிக்கப்படும்.
26
ஃபேன் + ஏசி :
ஏசி ஓடும்போது மெதுவான வேகத்தில் சீலிங் ஃபேனை ஓடவிடுங்கள். இது ஏசியின் குளிர்ந்த காற்றை அறையின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சீராகப் பரப்பும். இதனால் அறை சீக்கிரம் ஜில்லிடும், ஏசி கம்ப்ரஸர் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
36
வெப்பத்தை விரட்டுங்க :
வெயில் நேரடியாக ஜன்னல் வழியாக அறைக்குள் விழுந்தால், ஏசி எவ்வளவுதான் போராடினாலும் அறையை குளிரூட்ட முடியாது. தடிமனான திரைச்சீலைகள் அல்லது Heat Reflective Film பயன்படுத்துவது அறையின் வெப்பத்தை 30% வரை குறைக்கும்.
ஏசியின் பில்டரில் தூசி சேர்ந்தால், காற்று வெளியேற ஏசி அதிக பலத்தை பிரயோகிக்க வேண்டியிருக்கும். இதனால் மின்சாரம் அதிகம் செலவாகும். 15 நாட்களுக்கு ஒருமுறை நீங்களே பில்டரை கழற்றி தண்ணீரால் கழுவிப் பொருத்தினாலே போதும்!
56
கதவு இடுக்குகளை கவனியுங்கள் :
அறையின் கதவு அல்லது ஜன்னல் இடுக்குகள் வழியாக குளிர்ந்த காற்று வெளியேறுகிறதா? சிறிய ஓட்டையாக இருந்தாலும் அது உங்கள் கரென்ட் பில்லை ஓட்டை போட்டுவிடும். Door Seals அல்லது துணிகளை வைத்து அந்த இடைவெளிகளை அடையுங்கள்.
66
ஸ்லீப் மோட் (Sleep Mode) :
இரவில் தூங்கும்போது 'Sleep Mode' பயன்படுத்துங்கள். இது ஒவ்வொரு மணிநேரமும் வெப்பநிலையை சிறிது சிறிதாக உயர்த்தி, அதிகாலை நேரத்தில் ஏசி தேவையில்லாமல் இயங்குவதைக் குறைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.