Tamil health updates watermelon benefits: சுட்டெரிக்கும் வெயிலில் தர்பூசணி நமக்கு கிடைத்த அருமருந்து. வாயில் தர்பூசணி பழத்தை வைத்து கடித்தால் இனிப்பு சுவையுள்ள தண்ணீர் தொண்டையில் இதமாக இறங்கும். வெயிலுக்கு அப்படி ஒரு ஊட்டம் தரும் பழம் வேறு இல்லை. உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து வெயில் கால நோய்களில் இருந்து விலக்கி வைக்கும்.
இந்த பழத்தை காலை உணவின் போது அல்லது மதிய உணவுக்கு முன்பு உண்ணலாம். மாலையில் உண்ணலாமே தவிர இரவில் உண்ணக் கூடாது. இந்த பழத்தில் காணப்படும் வைட்டமின் சி சத்து நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. தலைமுடி, சரும ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் பி, பீட்டா கரோட்டின் தர்பூசணியில் அதிகம் உள்ளன.
தர்பூசணியில் 91% நீர் சத்து உள்ளது. நார்ச்சத்தும் அதிகம் கொண்ட இந்த பழம் பசியை கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைப்பில் தர்ப்பூசணி பழம் உதவும். நிறைந்துள்ளது. கண் பார்வையை மேம்படுத்தும்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் என்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். அழற்சி எதிர்ப்பு தன்மை அதிகம் கொண்டது. தர்பூசணி பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கும்போது, அதனை நல்ல பழமாக பார்த்து வாங்குவது அவசியம் தானே.. எப்படி அதை தேர்ந்தெடுப்பது என்பதை இங்கு காணலாம்.
நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி?
• நாம் வாங்கும் தர்பூசணி எந்த வடிவம் என்பதில் கொஞ்சம் கவனம் வேண்டும். வட்டமான தர்பூசணி, நீள் வட்டமான தர்ப்பூசணி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... அதில் புடைப்புகள், வெட்டுக்கள் இருக்கக் கூடாது. சீரான வடிவத்தில் இருக்க வேண்டும்.
• தர்பூசணியைத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் அளவுக்கு ஏற்ற கனம் கொண்ட பழத்தை தேர்ந்தெடுங்கள். சில பழங்கள் பார்க்க பெரிதாகவும் கையில் எடுத்தால் எடையில்லாமலும் இருக்கும். அது வேண்டாம்.