ஒரே நிமிடத்தில் கத்தி இல்லாம இஞ்சியின் தோலை சீவ சிம்பிள் டிப்ஸ்!!
இந்த பதிவில் கத்தி இல்லாமல் இஞ்சியும் தோலை சீவுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவில் கத்தி இல்லாமல் இஞ்சியும் தோலை சீவுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
How To Peel Ginger : இஞ்சி சமையலறையில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள். குறிப்பாக தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகமாக இஞ்சியை பயன்படுத்துவார்கள். டீ முதல் பிரியாணி வரை என அனைத்திலும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி சமையலுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்வதற்கு இஞ்சி பெரிதும் உதவுகிறது. இஞ்சியை பச்சையாகவே மென்றும் சாப்பிடலாம் அல்லது இஞ்சி சாறுடன் தேன் கலந்தும் சாப்பிடலாம். இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும், இஞ்சியின் தோலை சீவுவது சற்று சிரமமாகவே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், மிக எளிய முறையில் இஞ்சியின் தோலை சீவுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக இஞ்சி வாங்கும் போது அதனுடன் மண்ணும் இருக்கும். எனவே முதலில் இஞ்சி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் நிரப்பி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரில் இஞ்சி ஊறியதும் அதில் இருக்கும் மண்ணை சுலபமாக சுத்தம் செய்து விடலாம். பிறகு சமையலுக்கு எளிதாக பயன்படுத்தலாம். ஒருவேளை இஞ்சி அழுகியிருந்தால் சமையலுக்கு அதை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தண்ணீரில் கழுவிய இஞ்சியை நன்கு காய்ந்த பிறகு தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சியை வாங்கும் போது முதலில் அதன் வேர்கள் உலர்ந்து இருந்தால் அதை ஒருபோதும் வாங்க வேண்டாம். ஏனெனில் அது ஏற்கனவே வறண்டும், அதில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் இதற்கான அறிகுறி தான் இது. சற்று ஈரப்பதத்துடன் கூடுதல் எடையுடன் இருக்கும் இஞ்சி தான் பயன்படுத்துவதற்கு ஏற்றது.
இதையும் படிங்க: இஞ்சி 'டீ' போடும் போது பலர் செய்யும் 'தவறு' இதுதான்; இப்படி போட்டா சுவையா இருக்கும்!!
தோல் நீக்கி இஞ்சியை அப்படியே பிரிட்ஜில் வைக்க வேண்டாம். நன்கு காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு காற்று புகாதபடி மூடி வைக்க வேண்டும். தோழிக்கு இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் உங்களால் சமையலுக்கு எளிதாக பயன்படுத்த முடியும்.
இதையும் படிங்க: இஞ்சியை 'இப்படி' வைத்தால் '1' மாசம் ஆனாலும் கெட்டு போகாது!!
சிலர் சமையலுக்கு இஞ்சியின் தோலை உரிக்காமல் அப்படியே பயன்படுத்துவார்கள் ஆனால் அது தவறு. இஞ்சின் தோல் புதிதாக இருந்தால் கூட அதை நீங்கள் நன்கு கழுவி சுத்தம் செய்து பிறகு தான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் உணவின் தன்மை வேறுபடும்.
இஞ்சியின் தோலை உரிக்க கத்தி தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இதனால் சதை பகுதியும் தோலுடன் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதற்கு பதிலாக நீங்கள் ஸ்பூன் பயன்படுத்தி இஞ்சியின் தோலை மிகவும் எளிதாக எடுத்து விடலாம். ஒரு ஸ்பூனை கொண்டு இஞ்சியின் தோலை மேலிருந்து கீழாக மெதுவாக இழுதினால் போதும், அப்படியே வந்துவிடும். அதுபோல பீலரைக் கொண்டும் இஞ்சியின் தோலை ஒருபோதும் சீவக்கூடாது. இதனால் உங்களது கைகளில் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.