Garlic Peel Hacks : பூண்டு உரிப்பது சிரமமே இல்ல; ஒரு நொடிய உரிக்க இந்த டிப்ஸ் போதும் !

Published : Oct 13, 2025, 11:33 AM IST

எந்த கஷ்டமும் இல்லாமல் பூண்டு தோலை மிக எளிதாக உரிப்பது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15

பூண்டு சமயலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். சைவ முதல் அசைவ உணவுகள் வரை பூண்டின் தேவையானது பிரதானமாக உள்ளன. பூண்டு உணவிற்கு வலிமையான சுவையை கொடுப்பது மட்டுமில்லாமல், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. ஏனெனில் பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

25

பூண்டு தோலை உரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நீண்ட நேரம் எடுக்கும். ஏனெனில் அது ரொம்பவே மெல்லியதாகவும், ஒட்டும் தன்னை உடையதாகவும் இருக்கும். இதனால் பூண்டு தோலை உரிக்க சவாலாக தான் இருக்கும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் பூண்டின் தோலை மிக எளிதாக உரித்து விடலாம். அது என்ன என்பது பற்றி இங்கு காணலாம்.

35

சூடான நீர் :

பூண்டின் தோலை எளிதாக உரிக்க சூடான நீர் பயன்படுத்தலாம். இதற்கு சூடான நீரில் பூண்டை போட்டு சில நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடு குறைந்ததும் பூண்டு தோலை உரிக்கவும். எளிதாக உரிந்துவிடும்.

45

டப்பாவில் போட்டுக் குலுக்கவும் :

முதலில் பூண்டு பற்களை தனித்தனியாக எடுத்து அதை ஒரு டப்பாவில் போட்டு முடிவிடுங்கள். இப்போது பாத்திரத்தை நன்றாக குலுக்க வேண்டும். சுமார் 20-30 பூண்டு பற்களில் உள்ள தோல் பாதி அளவு புரிந்து வந்திருக்கும். இப்போது நீங்கள் அதை எளிதாக உரித்துவிடலாம்.

55

மைக்ரோவேவ் :

பூண்டு பற்களை மைக்ரோவேவ்வில் வைத்து 10 நிமிடங்கள் சூடாக்கவும். இப்படி செய்தால் பூண்டின் தோல் உரிப்பதற்கு எளிதாக இருக்கும். இந்த முறையானது உங்களது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் கைகளில் பூண்டு வாசனை அடிக்காது, பிசுபிசுப்பாகவும் இருக்காது.

Read more Photos on
click me!

Recommended Stories