மாதவிடாய் சமயத்தில் வயிறு வலி, கால் வலி, இடுப்பு வலி, வாந்தி, அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம் போன்ற பல சங்கடங்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர். இந்த சமயத்தில் என்னதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், அடிக்கடி நாப்கின் மாற்றினாலும் சில சமயங்களில் துணியில் மாதவிடாய் கறை படிந்துவிடும். இந்த கறையை அகற்றுவது சற்று சவாலான விஷயம்தான். ஆனால் சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் இந்த கறையை எளிதாக அகற்றி விடலாம். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
25
ஓடும் நீரில் அலசவும் :
மாதவிடாய் கறை ஆடையில் பட்டவுடனே ஓடும் நீரில் கறை அலசவும். துணி அல்லது டிஷ்யூ பேப்பர் பயன்படுத்தவும். பிறகு எப்போதும் போல சோப்பு போட்டு சுத்தம் செய்து வெயிலில் காய வைக்கவும்.
35
காய்ந்த கறையை அகற்றுவது எப்படி?
சில சமயங்களில் துணியில் மாதவிடாய் கறை பட்டிருக்கும் அதை நீங்கள் கவனிக்காமல் இருந்தால் காய்ந்து போய் இருக்கும். இதை போக்க கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும். ஆனால் இந்த ஆடையை சிறிது நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்துவிட்டு பிறகு சோப்பு போட்டு துவைக்கவும். துணியை ஊற வைக்கும் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்துக் கொண்டால் ஆடையில் துர்நாற்றம் வீசாது.
ஆடையில் பட்ட மாதவிடாய் கறையை அகற்ற எலுமிச்சை சாறு பெரிதும் உதவும். எலுமிச்சை சாற்றை கறைப்படைந்த இடத்தில் தேய்த்து சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு எப்போதும் போல சோப்பு போட்டு துவைக்கவும். இந்த முறையை வெளியில் வண்ண ஆடைகளில் பயன்படுத்தவும்.
55
சூடான நீர் பயன்படுத்தலாமா?
பல பெண்கள் மாதவிடாய் கறையை போக்க சூடான நீரில் துணிய ஊற வைத்துவிட்டு துவைப்பார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. இது கறையை மேலும் கடினமாக்கும். அதுபோல காட்டன் மற்றும் மென்மையான ஆடைகளை அழுத்தி தேய்க்காமல் மென்மையாக தான் தேய்ந்து துவைக்க வேண்டும்.
மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் ரொம்பவே எளிது. எனவே இனி மாதவிடாய் கறை ஆடையில் பட்டுவிட்டது என்று கவலைப்படாமல் மேலே சொன்ன டிப்ஸ்களை பயன்படுத்தி சுலபமாக நீக்கிவிடலாம்.