காலை நாம் உண்ணும் உணவுகள் மூளை உணவாகும். மூளை வேகத்தையும், ஆயுட்காலத்தையும் தீர்மானிப்பதே காலை உணவுகள்தான். இவை வெறுமனே வயிற்றை நிரப்ப மட்டுமல்ல, கொழுப்பைக் குறைக்கும் வளர்சிதை மாற்றம், நீண்ட ஆயுளோடு தொடர்புடையது.
காலை உணவுகள் உடலுக்கு ஆற்றல் அளிக்கும். சுறுசுறுப்பாக செயல்பட, சோம்பல் நீங்க காலை உணவுகளை மாற்றுவது அவசியம். காலை என்னென்ன உணவுகளை உண்ணக் கூடாது, எதை உண்ண வேண்டும் என இங்கு காணலாம். சர்க்கரை உணவுகள், மைதா உணவுகள் ஆகியவை ஆயுளை குறைக்க கூடிய சைலன்ட் கில்லர்கள். இதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.