ஒருவரின் நடை, உடை, பாவனைகள் அவர்மீது கவனம் வரக் காரணமாக இருக்கும். ஒருவருடைய மனதில் இடம்பிடிக்க குணநலன்களை போலவே ஸ்டைலும், பேஷனும் கூட அவசியமாகிறது. உங்களுடைய உடலமைப்புக்கு ஏற்ற ஆடைகள் உங்கள் தோற்றத்தை அழகாகவும், பொருத்தமற்ற ஆடைகள் உங்களை சுமாராகவும் காட்டும். நீங்கள் அணியும் சட்டைகள், ஜீன்ஸ், பேன்ட்கள் உடலுக்கு வசதியாக இருக்க வேண்டும்.