நாம் அணியும் ஆடைகளும் நம் தோற்றத்திற்கு காரணம். ஆள் பாதி ஆடை பாதி என சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். பார்க்க அழகாகவும், ஆளுமையுடனும் தெரிய ஆடைகள் முக்கிய காரணம். சரும நிறத்திற்கு ஏற்ற சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம். ஏனென்றால் ஆடைகள் உங்களுடைய முகத் தோற்றம், உணர்வுகளில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
26
சரும நிறம்
சரும நிறத்தை கூல், வார்ம், நியூட்ரல் என மூன்று வகையாக பிரிக்கிறார்கள். கூல் சரும நிறங்கள் என்பவை வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தவர்களை குறிக்கும். வார்ம் சரும நிறங்களுக்கு கீழ் மஞ்சள் அல்லது தங்க நிறத்தவர்களும், நியூட்ரல் சரும நிறங்கள் மேலே சொன்ன இரண்டின் கலவையான மாநிறமாகவும் இருப்பார்கள்.
36
சரும நிறம் எப்படி கண்டறிவது?
நீங்கள் எந்த சருமநிறம் எனக் கண்டறிய மணிக்கட்டில் இருக்கும் நரம்புகளைப் பார்க்கவேண்டும். அது நீலம் அல்லது ஊதாவாக தெரிந்தால் நீங்கள் கூல் ஸ்கின்டோன் கொண்டவர்கள். நரம்புகள் பச்சை நிறம் என்றால் வார்ம் சருமம் கொண்டவர்கள். ஆனால் இப்படி சரும நிறம் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்களுக்கு நியூட்ரல் என்ற மாநிறம்.
இந்த சருமம் இருப்பவர்கள் நீலம் அல்லது இளஞ்சிவப்பு ஆடைகளை அணிந்தால் சிறப்பான தோற்றம் கிடைக்கும். மரகத பச்சை, மாணிக்க நீலம் மற்றும் அமெதிஸ்ட் ஊதா ஆகிய நகை வண்ணங்கள் நல்ல தேர்வுகள். உங்களுக்கு நல்ல கவர்ச்சியான தோற்றம் அளிக்கும். லாவெண்டர், பேபி பிங்க் ஆகிய வெளிர் நிற ஆடைகளும் அழகாக இருக்கும். குறிப்பாக டார்க் நிறங்கள், ஆலிவ் க்ரீன், மஞ்சள், ஆரஞ்சு பழுப்பு ஆகிய வண்ண ஆடைகளை போடாமல் தவிருங்கள். இது டல் ஆக காட்டும்.
56
வார்ம் சருமத்திற்கு ஏற்ற நிறங்கள்
மஞ்சள் அல்லது கோல்டன் நிறம் உங்களை சிறப்பாகக் காட்டும். டெர்ராகோட்டா, மஞ்சள், பவளம் ஆகியவை உங்களுக்கு ஏற்றது. லைட் நிறங்களை தேர்வு செய்யலாம். நீல நிறம் சார்ந்த ஆடைகள் உங்களை டல்லாக காட்டும். லாவெண்டர், லைட் நீலம், சில்வர் ஆகியவை உங்களை டார்க் ஆக காட்டும். முடிந்தவரை தவிர்க்கவும்.
66
மாநிறம் சரும ஆடைகள்
மாநிறம் கொண்டவர்கள் பளிச்சென இருக்கும் ஆடைகள், லைட் நிறங்கள் இரண்டையும் அணியலாம். அதனால் இவர்கள் அணிந்து பார்த்து சிறப்பான தோற்றம் தரும் ஆடைகள் தேர்வு செய்யலாம். உங்களுக்கு பிடித்த நிறங்களை அணிந்துகூட முடிவு செய்யலாம். கருப்பு வெள்ளை ஆகிய நிறங்கள்கூட அழகாக இருக்கும்.
எப்போது ஆடை வாங்கினாலும் உடலமைப்புக்கு ஏற்ற ஆடைகளை தான் வாங்க வேண்டும். மிகவும் இறுக்கமாக அல்லது தளர்வாக வாங்கக் கூடாது. சரியான அளவில் ஆடைகள் அணிந்தால் தான் உங்களுடைய ஆளுனையும், தன்னம்பிக்கையும் வலுப்படுத்த உதவியாக இருக்கும்.