என்ன பிரச்சனை என்றே புரியவில்லையா? கவலை கொள்கிறீர்களா? - இந்த டிப்ஸ் உங்களுக்குதான்!

First Published | Sep 7, 2022, 4:28 PM IST

எதிர்மறை சிந்தனைகளில் கவனம் செலுத்தும்போது அது நம் இன்றைய மகிழ்ச்சி, செயல்பாடு, உடல் மற்றும் மன நலனை பாதிக்கும். அதிகம் யோசிப்பதை எப்படி நிறுத்துவது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
 

எப்போதும் ஒன்றை தொடங்குவதற்கு முன் யோசிப்பது நன்று தான். ஆனால் ஒன்றைப் பற்றியே அதிகம் சிந்திப்பது, குறிப்பாக இப்படி நடந்தால் என்னாகுமோ ஏதாகுமோ என எதிர்மறையாக சிந்திப்பது பயத்தை உண்டாக்கும். இது நமது நம்பிக்கையின்மையை தூண்டிவிட்டு நமது நல்ல யோசனைகள் மற்றும் திட்டங்களை கெடுத்துவிடும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளுக்கு, அதாவது வேலை பறிபோய் விடுமோ?, காதல் தோல்வியடைந்து விடுமோ, தொழில் வளர்ச்சி அடையாதோ போன்ற எதிர்மறை சிந்தனைகளில் கவனம் செலுத்தும்போது அது நம் இன்றைய மகிழ்ச்சி, செயல்பாடு, உடல் மற்றும் மன நலனை பாதிக்கும். அதிகம் யோசிப்பதை எப்படி நிறுத்துவது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
 

கவலை கொள்ளாதீர்கள்

நீங்கள் நீங்களாகவே இருங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை முதலில் நிறுத்துங்கள். ஏனெனில் மற்றவரும் அதே சிந்தனையில் இருப்பாரே தவிர உங்களைப் பற்றி யோசிக்க வாய்ப்பும் மிக குறைவுதான். உங்களிடம் மாற்றம் வேண்டும் என நீங்களே கருதினால் அதற்கான தீர்வை நீங்களாகவே தேடுங்கள்.
 


ஆக்கப்பூர்வமாக யோசியுங்கள்!

செயல்களை திறம்பட செயது முடிக்க, குழப்பமான எண்ண ஓட்டங்களில் இருந்து வெளி வர வேண்டும். குழப்பமான எண்ணங்களை ஓடவிட்டு அவைகளை அடக்கிவிட்டால் நேர்மறையான திட்டங்களும், யோசனைகளும் உருவாகும்.

மூச்சுப்பயிற்சி, தியானம், அமைதியான இசை போன்றவை மூலம் குழப்பமான மனதை அமைதியாக்கலாம். இது நல்ல சூழலை அமைத்து நேர்மறையான எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.

மன்னித்து விடுங்கள்

எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் நேரமெல்லாம் தவறாக போய்விடும், தோற்றுப்போகப் போகிறோம் என்றே எண்ணினால் அது அழிவு நிலைக்கும், முயற்சியின்மைக்கும் வழிவகுக்கும். அதற்கு பதில் நல்லதாக நினையுங்கள். நம்மால் முடிந்ததைச் சிறப்பாக செய்வோம் என நம்புங்கள்.

திருமணத்துக்கு பிறகு கணவனிடம் எல்லாமே சொல்ல வேண்டுமா என்ன? பெண்களே உஷார்..!!
 

நல்லவற்றை எண்ணிப் பாருங்கள்

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கும் சந்தோஷமான நிகழ்வுகளை பற்றி எண்ணிப் பாருங்கள். நமது நல்ல உறவினர்கள், நண்பர்கள், குடும்பம், நல்ல வேலை, இவை எல்லாம் கிடைத்திருந்தால், அதை எண்ணி சந்தஷோப்படுங்கள். சொந்த எதிர்மறை எண்ணங்களை விட யதார்த்தம் எப்போதும் சிறந்தவையே!
 

மூச்சுப் பயிற்சி

குறிப்பிட்ட ஒன்றை பற்றியே அதிகம் யோசிப்பது மிகுந்த கவலையை அளிக்கும். இது இதய படபடப்பு போன்ற பிரச்னைகளை உண்டு பண்ணும். இந்த சமயங்களில் எல்லாம் ஆழ்ந்த பெருமூச்சு விடுங்கள். குறைந்தது 10 ஆழ்ந்த சுவாசிப்பு தேவைப்படும். உங்கள் உடல் அதற்கு ஒத்துப்போகும் வரை சுவாசத்தில் கவனத்தை ஈடுபடுத்துங்கள். இந்த ஆழ்ந்த சுவாசம் மன அழுத்தத்தை போக்கி, அமைதி உணர்வை கொடுக்கும்.

பெண்கள் குறித்து ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 8 விஷயங்கள்..!!
 

தன்னார்வலர்

உதவி தேவைப்படும் நபருக்கு ஓடிச் சென்று உதவு செய்வது நம் கவனத்தை திசைத்திருப்ப ஓர் சிறந்த வழி. மற்றொருவர் மீது கவனம் செலுத்தும்போது உங்கள் சொந்த சூழ்நிலையைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது.

கோழி, ஆடு போன்ற இறைச்சி வாங்குவதற்கும் பக்குவம் உள்ளது- தெரியுமா உங்களுக்கு?
 

நடைபயிற்சி

மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி அவசியம். மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை அழிக்க இதுவே சிறந்த வழி என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சியின் ஒரு சிறந்த பக்கவிளைவு என்னவென்றால் அது மனதை லேசாக்கும் என்டார்பின் ஹார்மோன்களை வெளியிடுவது தான். மேலும் உங்களின் தற்போதைய எண்ணங்களிலிருந்து உங்களை மடைமாற்றும் வேலையையும் நடைபயிற்சி செய்யும்.
 

துக்க வீடுகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
 

இயன்றதை செய்யுங்கள்

எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் நேரமெல்லாம் தவறாக போய்விடும், தோற்றுப்போகப் போகிறோம் என்றே எண்ணினால் அது அழிவு நிலைக்கும், முயற்சியின்மைக்கும் வழிவகுக்கும். அதற்கு பதில் நல்லதாக நினையுங்கள். நம்மால் முடிந்ததைச் சிறப்பாக செய்வோம் என நம்புங்கள்.

இந்த தருணத்தில் வாழுங்கள்

கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பது, எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவதை விட இன்றைய இந்த தருணத்தில் கவனம் செலுத்துங்கள். கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது. எதிர்காலத்தை பற்றி கணிக்கவும் முடியாது. நிகழ்காலம் உங்கள் கையில் உண்டு சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மனைவி கையால், இந்த ஒரு பொருளை கணவருக்கு சாப்பிட கொடுத்தால் போதும்..கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்

எதிர்மறையான எண்ணங்கள் மேலோங்க எது காரணமாக இருக்கிறது என தெரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏன் அது அந்த எண்ணங்களை ஏற்படுத்துகிறது என கண்டுபிடித்து அதனை ஒப்புக்கொண்டால், எதிர்மறை எண்ணங்களை சமாளிக்கும் வழி பிறக்கும். தேவையற்ற எண்ணங்கள், அதிக யோசனைகள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். வாழ்வும் சிறக்கும்.

Latest Videos

click me!