
நம்முடைய வீடுகளில் நாம் அதிகம் பயன்படுத்தும் இடம், சமையல் அறைதான். நாம் நாள்தோறும் ஓடி ஓடி உழைப்பது எல்லாம் எதற்காக, நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு தானே..ஆனால், ஆரோக்கியம் என்பது, உணவு சார்ந்த விஷயம் மட்டும் தான் என்றால், அது முற்றிலும் தவறு..ஆம், உண்மையில் ஆரோக்கியம் என்பது உணவு மட்டுமின்றி, சுத்தம் சார்ந்த விஷயமும் கூட..
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. தூய்மையான இடத்தில் சமைக்கப்படும் உணவு நமக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அளிக்கும். தூய்மையான சமையலறையில் சமையல் செய்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவும்.
நம் வீட்டு சமையல் அறையில், நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்களில் ஒன்று கேஸ் அடுப்பு ஆகும். தினம் சமைத்து முடித்த பின்பு கேஸ் அடுப்பு மற்றும் அதன் கீழே இருக்கும் மேடையையும் சுத்தம் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
சமைத்த உணவு அப்படியே சமையல் மேடையில் சிந்தி இருந்தால், அது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்ல விஷயம் அல்ல. குறிப்பாக, நீங்கள் இரவில் சமைத்து முடித்து விட்டு, கேஸ் அடுப்பை சுத்தமாக துடைக்காமல் விட்டு விட்டால், இரவில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வந்து அந்த இடங்களை அசுத்தம் செய்யும்.
இது நீங்கள் மறுநாள், அந்த இடத்தில் காய்கறிகளை வெட்டி உணவு சமைத்து உண்ணும் போது, உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் நாளடைவில் வாந்தி, பேதி போன்ற ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். எனவே, சமையல் செய்த உடனே அடுப்பை துடைத்து எடுக்க வெறும் ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
எனவே, உங்களுடைய அடுப்பு எவ்வளவு பழையதாக இருந்தாலும், அதை ஒரு நிமிடத்தில் புதியதாக மாற்ற சூப்பரான டிப்ஸ் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் சமைத்த ஐந்து நிமிடம் கழித்து உங்களுடைய கேஸ் அடுப்பை, எண்ணெய் பிசுபிசுப்பு போகும் படி ஒரு ஈரத் துணியை வைத்து துடைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, கோலமாவு, சால்ட் உப்பு இந்த இரண்டு பொருட்களில் ஏதாவது ஒன்றை ஸ்பான்ச் ஸ்கிரப்பரை கொண்டு பயன்படுத்தி தேய்த்து விடுங்கள்..
இறுதியாக 1 ஸ்பூன் விபூதியை எடுத்து இந்த ஸ்டவ்வின் மேலே நன்றாக தூவி விட்டு ஒரு துண்டை வைத்து ஸ்டவ்வை துடைத்து எடுத்து பாருங்கள். உங்கள் கேஸ் அடுப்பு எத்தனை வருடமாக பயன்படுத்திய பழைய ஸ்டவ்வாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் பழைய ஸ்டவ், புதுசு போல பள பளப்பாக ஜொலிக்க தொடங்கி விடும்.
அதேபோன்று, அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால், ஒரு காலியாக ஸ்பிரே பாட்டிலில் 1 ஸ்பூன் ஷாம்பு, 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக குளிக்க கொள்ளுங்கள். இந்த ஷாம்பு தண்ணீரை அடுப்பின் மேடையும் மேலும் நன்றாக ஸ்பிரே செய்துவிட்டு ஒரு ஈரத்துணியை வைத்து நன்றாக துடைத்தால் எண்ணெய் பிசுபிசுப்பு அழுக்கு மொத்தமும் சுத்தமாக நீங்கிவிடும்.
பிறகு காய்ந்த துணியை வைத்து ஒருமுறை துடைத்து கொண்டால் பளிச்சென்று, பளபளன்னு மின்னும். மேலும், இந்த ஷாம்பு வாடைக்கு எறும்பு கரப்பான் பூச்சி போன்றவை வரவே வராது. நீங்கள் உங்கள் வீட்டில் நிச்சயம் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.