வீட்டை துடைக்கும்போது தண்ணீரில் இதை போடுங்க.. ஒரு கிருமி கூட இருக்காது

Published : Jul 28, 2025, 12:00 PM IST

உங்களது வீட்டை கிருமிகள் இல்லாத கோட்டையாக மாற்ற வீடு துடைக்கும் தண்ணீரில் சில பொருட்களை சேர்த்து துடையுங்கள். பூச்சிகள் வராது.

PREV
15
DIY Floor Cleaner

வீட்டை எவ்வளவுதான் துடைச்சாலும் பூச்சிகள், கொசுக்கள், பல்லி தொல்லை அதிகமாகவே இருக்கும். அவற்றை விரட்டுவதற்கு கெமிக்கல்ஸ் ஸ்பிரே அடித்தாலும் அது நமக்கும் வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளுக்கும் ஆபத்தை விளைவுக்கும். இத்தகைய சூழ்நிலையில், எந்தவித இரசாயனங்களுமின்றி வீட்டில் இருக்கும் சில பொருட்களை வீடு துடைக்கும் தண்ணீரில் கலந்து துடைத்தால் பூச்சிகள், கொசுக்கள், ஈக்கள் தொல்லை இனி இருக்கவே இருக்காது. முக்கியமாக உங்களது வீட்டை கிருமிகள் இல்லாத கோட்டையாக மாற்றிவிடலாம். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
வினிகர் :

வினிகர் இயற்கையான கிருமி நாசினி மற்றும் வாசனை நீக்கியாகும். இதில் இருக்கும் அமிலத்தன்மை பூச்சி, பல்லிகளுக்கு பிடிக்கவே பிடிக்காது. எனவே இதை நீங்கள் மா போடும் தண்ணீரில் கலந்து தரையை துடைத்தால் அதிலிருந்து வரும் வாசனை பூச்சிகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்கும். மேலும் இது உங்களது வீட்டின் தரையை பளபளக்க செய்யும்.

35
புதினா எண்ணெய் அல்லது எலுமிச்சை எண்ணெய் :

வீட்டில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள், பூச்சிகளை விரட்டி அடிக்க புதினா எண்ணெய் அல்லது எலுமிச்சை எண்ணெய் ரொம்பவே நல்லது. இந்த எண்ணெயில் இருந்து வரும் வாசனை பூச்சிகளுக்கு சுத்தமாகவே பிடிக்காது. எனவே மாப்போடும் தண்ணீரில் 8-10 சொட்டு புதினா எண்ணெய் அல்லது எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து தரையை துடைக்க வேண்டும். இதனால் வீடு நல்ல வாசனையாக இருக்கும். அதே சமயம் பூச்சிகளும் வராது.

45
வேப்ப எண்ணெய் :

வேப்ப எண்ணெய் சிறந்த இயற்கையான பூச்சிக்கொல்லி என்பதால், மாப் போடும் தண்ணீரில் 10 அல்லது 12 சொட்டு இந்த எண்ணெய் கலந்து வீட்டை துடைத்தால் அவற்றிலிருந்து வரும் வாசனை கரப்பான், பூச்சி, பல்லி, கொசு, ஈக்களுக்கு பிடிக்காது என்பதால் வீட்டை விட்டு ஓடி விடும்.

55
தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெய் கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, மாப்பு துடைக்கும் தண்ணீரில் 10 சொட்டு இந்த எண்ணெயை கலந்து துடைத்தால் வீட்டில் இருக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அகன்று விடும்.

Read more Photos on
click me!

Recommended Stories