2. தயிர் சேர்த்து ஊறவைத்தல்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், கறியை மென்மையாக்கும். தயிர், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, மசாலா சேர்த்து குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
3. எலுமிச்சை சாறு அல்லது வினிகர்:
சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்தாலும் கறி மென்மையாகும். ஆனால், அதிகமாகச் சேர்த்தால் கறியின் சுவையும் தன்மையும் மாறிவிடும், கவனம் தேவை.
4. பிரஷர் குக்கர்:
முத்தலான கறி குக்கரில் வேகவும் கூடுதல் நேரம் எடுக்கும். அதனால், வழக்கத்தை விட இரண்டு விசில் கூடுதலாக மிதமான தீயில் வேகவிடுங்கள். கறி சீராகவும் சீக்கிரமாகவும் வெந்துவிடும்.
5. வெந்நீர் பயன்படுத்துங்கள்:
சமைக்கும்போது இடையில் தண்ணீர் சேர்க்க வேண்டுமென்றால், பச்சைத் தண்ணீருக்குப் பதில் வெந்நீரை ஊற்றுங்கள். இது சமையல் வெப்பநிலையை குறைக்காமல், கறி இறுக்கமாகாமல் பார்த்துக்கொள்ளும்.
6. சிறிய துண்டுகள்:
பெரிய துண்டுகளை விட, நடுத்தர அளவுத் துண்டுகளாக நறுக்கினால் கறி சீக்கிரம் வேகும். மசாலாவும் நன்றாகப் பிடிக்கும். இந்த டிப்ஸ்களைப் பின்பற்றினால், எவ்வளவு முத்தலான மட்டனாக இருந்தாலும், அதை சுவையாகவும், ஜூசியாகவும், பஞ்சு போலவும் சமைத்து அசத்தலாம்.