AC போட்டாலும் கரெண்ட் பில் பாதியா குறையணுமா? இந்த ஈரத் துண்டு மேஜிக்கை ட்ரை பண்ணுங்க!

Published : Aug 06, 2026, 03:01 PM IST

Ways to reduce AC bill : வெயில் காலத்தில் ஏசி இல்லாமல் இருக்க முடியாது, ஆனால் மாத இறுதியில் கரண்ட் பில்லைப் பார்த்தால் தலை சுற்றும். ஒரு சாதாரண ஈரத் துண்டை வைத்து ஏசி செலவை 20-25% வரை குறைக்க முடியும்.

PREV
15
AC power saving Tips

ஏசியின் உண்மையான எதிரி வெப்பம் இல்லை, காற்றில் உள்ள ஈரப்பதம்தான். அறையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, காற்றை உலர வைக்கவே ஏசிக்கு 40 நிமிடங்கள் ஆகிறதாம். அதன் பிறகுதான் அறையை குளிர்விக்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில்தான் கரண்ட் மீட்டர் ராக்கெட் வேகத்தில் சுழலும். இதனால் கரெண்ட் பில் அதிகரிக்கும். அந்த கரெண்ட் பில்லை கம்மி பண்ண ஒரு சூப்பர் ட்ரிக் இருக்கு. அதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

AC பயன்படுத்தும் 90% பேருக்கும் தெரியாத 3 நிமிட ரூல்... இதை ஃபாலோ பண்ணா கரெண்ட் பில் கம்மியாகும்!

25
ஈரத் துண்டு எப்படி வேலை செய்கிறது?

ஏசி போடும் முன் உங்க ரூமில் ஒரு ஈரத் துண்டை வைக்க வேண்டும். ஈரத் துண்டில் உள்ள நீர் ஆவியாகும்போது, அது அறையில் உள்ள வெப்பத்தை ஈர்த்துக் கொள்கிறது. இதனால், அறையின் வெப்பநிலை தானாகவே 2-3 டிகிரி குறைந்துவிடும். அதே நேரத்தில், காற்றில் உள்ள ஈரப்பதமும் குறையும். ஏசி ஆன் செய்யும்போது, அறை ஏற்கெனவே ஓரளவு குளிர்ச்சியாகவும், ஈரப்பதம் இல்லாமலும் இருந்தால், கம்ப்ரெஷருக்கு வேலை குறையும். கம்ப்ரெஷர் 10 நிமிடங்கள் ஓடுவதற்குப் பதிலாக, 6 நிமிடங்களிலேயே அறையை குளிர்வித்துவிடும். ஏசியின் 90% மின்சாரத்தை உறிஞ்சுவதே இந்த கம்ப்ரெஷர்தான்.

35
இந்த 3 ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க

1. ஒரு பெரிய காட்டன் துண்டு அல்லது டவலை குளிர்ந்த நீரில் நனைத்து, சொட்டு சொட்டாக நீர் வராதபடி நன்றாகப் பிழிந்து கொள்ளுங்கள். இப்போது அந்தத் துண்டை ஏசி இல்லாத அறையில், அல்லது ஃபேன் ஓடும் அறையில் ஒரு சேர் மீது விரித்து வைக்கவும். டேபிள் ஃபேன் இருந்தால் அதன் முன்னால் தொங்கவிடலாம். ஃபேன் காற்றில் நீர் ஆவியாகி, அறையின் வெப்பத்தை ஈர்க்கும். ஏசி போடும்போது அந்தத் துண்டை எடுத்துவிட வேண்டும்.

2. பலர் ஈரத் துண்டை ஏசியின் இன்டோர் யூனிட் மீதோ அல்லது அதன் முன்பாகவோ வைப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. ஈரக்காற்று நேரடியாக ஏசிக்குள் சென்றால், அதன் PCB சர்க்யூட் ஷார்ட் ஆகிவிடும். ஃபில்டர் அடைபட்டு, கூலிங் காயிலில் பூஞ்சை பிடித்துவிடும். சர்வீஸ் செலவு ₹3000 நிச்சயம்.

3. இரவில் தூங்கும் முன் ஒரு சிறிய ஈரத் துண்டை ஜன்னல் கம்பியிலோ அல்லது கதவின் பின்னாலோ தொங்கவிடுங்கள். இது இரவு முழுவதும் மெதுவாக அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால், ஏசியை 24 டிகிரியில் வைத்தாலே, 22 டிகிரியில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும். ஏசி வெப்பநிலையை 1 டிகிரி அதிகரித்தால் 6% மின்சாரம் சேமிக்கப்படும். 24 டிகிரிக்குப் பதிலாக 26 டிகிரியில் ஏசியை இயக்கி இந்த டெக்னிக்கை பயன்படுத்தினால், மாதம் ₹700-₹800 வரை சேமிக்கலாம்.

45
கரெண்ட் பில்லை 50% குறைக்கும் 5 டிப்ஸ்

1. 16-18 டிகிரியில் வைத்தால் அறை வேகமாக குளிராது, கம்ப்ரெஷர் மட்டும் நிற்காமல் ஓடும். மனித உடலுக்கு 24-26 டிகிரிதான் சரியானது.

2. ஏசியுடன் சீலிங் ஃபேனை குறைந்த வேகத்தில் இயக்கவும். குளிர்ந்த காற்று அறை முழுவதும் பரவி, 27 டிகிரியிலும் இதமாக இருக்கும்.

3. கதவின் கீழ் பகுதியில் துண்டை வைத்து அடைக்கவும். ஜன்னல்களில் தடிமனான திரைச்சீலைகளைப் பயன்படுத்தவும். குளிர்ந்த காற்று வெளியேறினால் கம்ப்ரெஷர் அடிக்கடி ஓடும்.

4. அழுக்கு ஃபில்டர் 15% அதிக மின்சாரத்தை இழுக்கும். இன்டோர் யூனிட்டின் மூடியைத் திறந்து ஃபில்டரை எடுத்து, தண்ணீரில் கழுவி உலர வைக்கவும்.

5. பகல் நேரங்களில், மேற்குப் பகுதி ஜன்னல்களில் சன்ஃபிலிம் அல்லது தடிமனான திரைச்சீலைகளைப் பயன்படுத்தவும். இதனால் அறை குறைவாக சூடாகும்.

55
செய்யக்கூடாதவை

ஏசி ஓடும்போது கதவைத் திறந்து வைப்பது, அடிக்கடி வெப்பநிலையை மாற்றுவது, அவுட்டோர் யூனிட்டை வெயிலில் வைப்பது, 8-10 வருடங்கள் பழைமையான நான்-இன்வெர்ட்டர் ஏசியை பயன்படுத்துவது. 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசி 40% வரை பில்லைக் குறைக்கும்.

1.5 டன் 5 ஸ்டார் ஏசியை 24 டிகிரியில் தினமும் 8 மணி நேரம் இயக்கினால், மாதச் செலவு ₹1800. அதே ஏசியை 20 டிகிரியில் இயக்கினால் செலவு ₹2800. இதனுடன் ஈரத் துண்டு டெக்னிக்கையும் சேர்த்தால், ₹1800 பில் ₹1300-₹1400 ஆகக் குறையும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories