Mushroom Gravy: பத்து வீடு மணக்கும் இந்த சுவையான காளான் குருமா..? ரெசிபியை வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.
இன்றைய பிஸியான வாழ்கை முறையில், தினமும் காலை எழுந்ததும் அவசர அவசரமாக இட்லி, தோசை, போன்டர் உணவுகளுக்கு தொட்டு கொள்ள குறைவான நேரத்தில் சட்னி , சாம்பாரை வைத்து விடுவோம். ஆனால், தினமும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட்டு அலுத்துப்போய் விட்டது என்றால், வித்தியாசமான உணவுகளை சாப்பிட ஆசை இருக்கும்.
26
Mushroom Gravy:
இருப்பினும், செய்ய டைம் இருக்காது. தற்போது, ஒரு சட்னி அரைக்கின்ற நேரத்தில் சூப்பரான மஷ்ரூம் குருமா வைக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, நான் ரொட்டி இவைகளுக்கு இந்த சைட் டிஷ் அசத்தலாக இருக்கும். பக்கத்து வீட்டு வரைக்கும் இதன் வாசம் வீசும், எனவே, பத்து வீடு மணக்கும் இந்த குருமா ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து வைத்து கொள்வோம்.
1. முதலில் 200 கிராம் அளவு மஸ்ரூமை எடுத்து சுத்தம் செய்து வெட்டி அதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இதையடுத்து, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சோம்பு,சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை கிராம்பு, வெங்காயம் போன்ற பொருட்களை எல்லாம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
2. பின்னர் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
66
Mushroom Gravy:
3. பிறகு, அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி, புதினா இலைகள், கருவேப்பிலை சேர்ந்து நன்றாக வதக்கி வீட்டா வேண்டும்.
4. பின்னர் மஸ்ரூமை அதில் சேர்ந்து நன்குகலந்து விட வேண்டும். பின்னர், மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு நன்றாக கலந்து குக்கரை மூடி ஒரே ஒரு விசில் விட வேண்டும். இப்போது மணக்க மணக்க சுவையான குருமா தயார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.