செய்முறை விளக்கம்:
முட்டைக்கோஸ் சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு முட்டைக்கோசை எடுத்து நன்கு கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு அதே கடாயில் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, தனியா விதை, மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். பிறகு பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.