சென்னை ஐஐடி
இந்தியாவில் மிக சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி உள்ளது. படிப்பு மற்றும் பயிற்சிகள் மட்டும் அல்லாமல்,மாணவர்களின் தங்களின் ஆா்வத்திற்கு ஏற்ப பல துறைகளைத் தோ்ந்தெடுத்து தங்கள் திறமையை வளர்த்து கொள்ள எல்லா வசதிகளையும் சென்னை ஐஐடி செய்து தருகிறது.
அதுமட்டுமின்றி, கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் பழைய மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய வழிகாட்டி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் சென்னை ஐஐடி உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. மேலும், சென்னை ஐஐடி வளாகத்தில் அதி நவீன திரையரங்கம், திறந்த வெளி திரையரங்கம் மற்றும் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய பல அரங்குகள் போன்றவை உள்ளன.