குறிப்பாக, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் மூட்டு வலி, உட்காருவதில் சிரமம், விரல்களில் வீக்கம் என பல வகையான பிரச்சனைகள் உடலில் ஏற்படும். யூரிக் அமிலம் உருவாகும்போது, இந்த அமிலத்தின் சிறிய துண்டுகள் மூட்டுகள், தசைகள் மற்றும் திசுக்களில் படிகங்களின் வடிவத்தில் குவிந்து விடும். இந்த யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிக்கலான ஒன்றாகும். எனவே, நாம் எப்படி எளிதில் இந்த யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.