Snake Prevention Tips : மழை நேரத்துல வீட்டுக்கு பாம்பு வராமல் தடுக்கும் 4 பொருட்கள்; உடனே வாங்கி வைங்க

Published : Jun 30, 2025, 01:49 PM IST

மழைக்காலத்தில் உங்களது வீடு, தோட்டம் மற்றும் வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் பாம்பு வந்து போகிறது என்றால், அதை துரத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

PREV
16
பாம்புகளை விரட்டும் வழிகள்

மழைக்காலம் வரப்போகிறது. இந்த சீசனில் ஆறு, வாய்க்கால், குளம், பூங்கா போன்றவற்றிற்கு அருகில் வசிப்பவர்கள் வீட்டில் பாம்புகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. எனவே இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பல நேரங்களில் அவை வீட்டுக்குள் நுழைந்துவிடும். பாம்பு உங்களது வீடு அல்லது தொற்று வந்து போய்க் கொண்டிருந்தால் அது உங்களுக்கும் உங்களது குழந்தைக்கும் நல்லதல்ல. ஆபத்துதான். எனவே, உங்கள் வீடு தோட்டம் மற்றும் வீட்டை சுற்றி பாம்புகள் வராமல் தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுவதும் மூலம் வீடு மற்றும் தோட்டத்தில் இருந்து பாம்புகளை எளிதாக விரட்டி விடலாம். அது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

26
நாப்தலின் பால்ஸ் :

உங்களது வீட்டு தோட்டத்தில் பாம்புகள் வராமல் இருக்க நாப்தலின் பால்ஸ் நிச்சயம் முடியும். உங்களது வீட்டை சுத்தி பாம்புகள் வருவதை தடுக்க உதவும். இதற்கு முதலில் 4-5 நாப்தலின் பால் ஸ்காலில் மையாக அரைத்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கரைசல் போல் தயாரித்து, அதை உங்கள் வீட்டு மரம் செடி மற்றும் வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் தெளிக்க வேண்டும். கடுமையான வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது என்பதால் அவை வீட்டிற்குள் வராது. ஆனால் குழந்தைகள் அதை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

36
அம்மோனியா :

பாம்புகளுக்கு அம்மோனியாவில் இருந்து வரும் கடுமையான வாசனை பிடிக்காது. எனவே இந்த வாசனையால் பாம்புகள் வீட்டிற்குள் நுழையாமல் நொடியிலே ஓடிவிடும். இது பாம்புகளை மட்டும் அல்ல மழைக்காலத்தில் பூச்சிகளை கூட வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும். இதற்கு 2 கப் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அம்மோனியா சேர்த்து நன்கு கலந்து அந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலின் நிரப்பி அதை உங்களது வீட்டை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மரம், செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

46
லவங்கப்பட்டை மற்றும் கிராம்பு எண்ணெய் :

உங்கள் வீட்டு தோட்டத்தில் பாம்புகள் வருவதை தடுக்க இலவங்கப்பட்ட மற்றும் எண்ணெய் கிராம் உதவும். இவற்றிலிருந்து வரும் கடுமையான வாசனையால் பாம்புகள் வீட்டிற்குள் வராமல் ஓடிவிடும். இதற்கு ஒரு கப் தண்ணீரில் 2 ஸ்பூன் கிராம்பு மற்றும் லவங்கப்பட்ட எண்ணையை சேர்த்து நன்றாக கலந்து அந்த கரைசலை உங்கள் வீட்டு தோட்டத்தில் தெளிக்கவும். இதனால் பாம்புகள் தொல்லை மட்டுமல்ல பூச்சிகள் தொல்லை கூட இருக்காது.

56
சல்பர் பவுடர் :

உங்கள் வீட்டிற்கு பாம்பு வராமல் தடுக்க சல்ஃபர் பவுடர் சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். இந்த கலவையை உங்களது வீட்டின் தோட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தெளித்தால் பாம்புகள் வீட்டிற்குள் நுழையவே நுழையாது.

66
வினிகர் மற்றும் சமையல் சோடா :

வீட்டிற்குள் பாம்புகள் வருவதை தடுக்க எலுமிச்சை வினிகர் மற்றும் சமையல் சோடா கலவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கலவையை வீட்டின் தோட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தெளித்தால் பாம்புகள் வீட்டிற்குள் வராது.

குறிப்பு ; மேலே சொன்ன விஷயங்களின் தவிர உங்கள் வீட்டு மற்றும் தோட்டத்தை எப்போதுமே சுத்தமாக வைத்தால் பாம்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

Read more Photos on
click me!

Recommended Stories