பொதுவாகவே மழைக்காலத்துல மசாலா பொருட்களை ஃபிரஷாக சேமிப்பது கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும். அதுவும் குறிப்பாக, ஈரப்பதம் காரணமாக மாவு பொருட்களில் கட்டிகளாக மாறிவிடும் மற்றும் உப்பு தண்ணீராகும். அவற்றை பயன்படுத்துவதற்கு கடுப்பாக இருக்கும். இந்த பிரச்சனையை நீங்களும் எதிர்கொள்கிறீர்களா? இதோ உங்களுக்காக சில சூப்பரான டிப்ஸ்கள் இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மட்டும் பின்பற்றினால் போதும். உப்பு நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.
26
கண்ணாடி பாட்டிலில் வை:
பொதுவாக பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் உப்பை சேமித்து வைப்பார்கள். அப்படி வைத்தால் ஈரப்பதம் காரணமாக உப்பு தண்ணீராக மாறும். எனவே மழைக்காலத்தில் மட்டுமாவது உப்பை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வையுங்கள். தண்ணீர் விடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.
36
மூட மறக்காதே!
சமையலுக்கு உப்பு அடிக்கடி பயன்படுத்துவதால் எல்லாருடைய வீடுகளிலும் திறந்து வைப்பது அல்லது அதன் மூடியே லேசாக மூடி வைப்பார்கள். ஆனால் இப்படி செய்தால் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக உப்பில் தண்ணீர் விடும். எனவே மழைக்காலத்தில் உப்பின் டப்பாவை இறுக்கமாக மூடுங்கள்.
பொதுவாக உப்பு டப்பா அடுப்பு பக்கத்தில் தான் இருக்கும். அப்போதுதான் எடுப்பதற்கு வசதியாக இருக்கும். ஆனால் அப்படி வெப்பமான இடத்தில் வைக்கும் போது உப்பு உருகி தண்ணீர் விடும். எனவே தேவையான அளவு மட்டும் ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் மீதமானதை உலரிடத்தில் வையுங்கள்.
56
ஜிப் லாக் பை
பொதுவாக எல்லார் வீட்டிலும் உப்பு நேரடியாக டப்பாவில் தான் போட்டு வைத்திருப்போம். ஆனால் அப்படி செய்வதற்கு பதிலாக அதை ஒரு பிளாஸ்டிக் கவர், ஜிப் லாக் பை அல்லது ஈரத்தை உறிஞ்சி கூடிய துணிப்பையில் போட்டு வையுங்கள்.
66
டப்பாவை மாற்று
பெரும்பாலான வீடுகளில் வருடக்கணக்கில் உப்பை ஒரே டப்பாவில் தான் ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். உப்பு காலியாக காலியாக மீண்டும் அதே டப்பாவில் சேமிப்பார்கள். ஆனால் இது தவறு. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கண்டிப்பாக உப்பு டப்பாவை மாற்ற வேண்டும் அல்லது உப்பு தீர்ந்த பிறகு வேறு ஒரு டப்பாவை பயன்படுத்துங்கள். பழைய டப்பாவை நன்கு கழுவி காயவைத்து பிறகு பயன்படுத்துங்கள்.
மேலே சொல்லப்பட்ட டிப்ஸ்களை நீங்கள் ஃபாலோ பண்ணி வந்தால் மழைக்காலத்தில் உப்பு பிரஷ்ஷாகவே இருக்கும். நீண்ட நாள் அதன் தன்மை மாறாமல் இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.