அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி சென்ற பெண் குழந்தை மதிய உணவு நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிறுமியின் இறப்பிற்கு மாரடைப்புதான் காரணம் என தெரியவந்துள்ளது. இதே மாதிரி உத்தரப் பிரதேசத்திலும் பள்ளி சென்ற சிறுவன் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், அதைத் தடுக்க பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்தும் காணலாம்.
பெரியவர்களுக்கு ஏற்படும் மாரடைப்பிற்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வரும் மாரடைப்பிற்கும் வெவ்வேறு வகையான காரணங்கள் இருக்கின்றன.
25
பிறப்பு காரணம்
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஒரே நாளில் ஏற்பட்டு விடுவதில்லை. அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட முக்கியமான காரணமே பிறவியில் அவர்களுக்கு இதயம் தொடர்புடைய பிரச்சனைகள் இருப்பதுதான். சில குழந்தைகள் பிறந்த சமயத்தில் பெற்றோர் அதை சரியாக கவனிக்காமல் விட்டிருப்பார்கள்.
35
அறிகுறிகள்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளும் இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றன.
1). மயக்கம்
2). மார்பில் வலி
3). மூச்சுத் திணறல்
4). கால்விரல், நகங்கள் நீல நிறமாகும்
இது போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்படும் போது அதை அலட்சியப்படுத்தக் கூடாது.
குழந்தைகளிடம் அவர்களுக்கு ஏதேனும் வலிகள், வித்தியாசமான அறிகுறிகள் ஏற்படும் போது அதை பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமையாகும். பெரியவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படும் போது எப்படி இதயம் சார்ந்த பரிசோதனைகள் செய்யப்படுகிறது. அதே போலவே குழந்தைகள் தங்களுடைய உபாதைகளை தெரிவிக்கும் போது முறையாக பரிசோதிக்க வேண்டும்.
55
விழிப்புணர்வு
மாரடைப்பிற்கான அறிகுறிகள், அதை தடுக்கும் முறைகள் குறித்து பெற்றோர் கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம். இதைப் போல பள்ளி ஆசிரியர்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் பெற்றோரை விட பள்ளியில் தான் அதிக நேரம் செலவு செய்கின்றனர். ஆகவே பள்ளியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு பெரும்பாலும் பிறப்பு காரணங்கள் தான் இருக்கும் என்பதால் அவர்களை முறையாக பரிசோதித்து, கண்காணிப்பது அவசியம். இது மாரடைப்பில் இருந்து அவர்களை காத்துக் கொள்ள சிறந்த வழியாகும்.