தேன் உடலுக்கு மிகவும் நல்லது, ஆனால் அந்த தேனுடன் நீங்கள் கொஞ்சம் அரிசி மாவை கலந்து கூட இந்த பாத வெடிப்புக்கு நீங்கள் தீர்வு காணமுடியும். அதாவது 3 பங்கு அரிசி மாவிற்கு ஒரு பங்கு தேன் மற்றும் உங்கள் வீட்டில் வினிகர் இருந்தால் அதையும் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவையை உங்கள் வெடிப்பு உள்ள பாதங்களில் நன்றாக தேய்க்கவும். இந்த கலவை ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் உங்கள் கால்களில் ஊற வேண்டும். அப்படி ஊறிய கால்களை நன்றாக கழுவுங்கள். இந்த விஷயத்தை வாரம் 3 முறை செய்தால், நிச்சயம் இரண்டே வாரத்தில் உங்கள் பாத வெடிப்பு நீங்கி நல்ல பளபளவென பாதங்கள் உங்களுக்கு கிடைக்கும்.