மாமியார் - மருமகள் இடையே இருக்கும் பிரச்சனை என்பது ஒரு யுனிவெர்சல் பிரச்சனை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. மாமியார் - மருமகள் எந்த பிரச்சனையும் கருத்து வேறுபாடும் இல்லாமல் இருப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. மாமியார், மருமகள்களுக்கு இடையே எப்போதும் நல்லுறவு இருக்காது.
மருமகள் வீட்டிற்குள் நுழைந்த பிறகு அவள் என்ன செய்தாலும் தவறுகளைத் தேடுவது நல்லதல்ல. காலத்திற்கேற்ப மனிதர்களும் மாற வேண்டும்.
உங்கள் மகனை மணந்து, தன் குடும்பத்தை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்கு வந்த பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது. உங்கள் மகனை திருமணம் செய்து வீட்டிற்கு ஒரு பெண் வரும் பட்சத்தில் அது உங்கள் வீடு.. மருமகளுக்கும் அது தான் வீடு.
மருமகள் வீட்டில் ஏதேனும் தவறு செய்தால்.. தாயைப் போல மன்னிக்க வேண்டும். உன் வளர்ப்பு சரியில்லை என்று அவளையும் அவள் பெற்றோரையும் திட்டுவது நல்லதல்ல.
குடும்பத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும்போது.. அதில் உங்கள் மருமகளுக்கும் பேசும் உரிமை இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.