இன்றைய காலகட்டத்தில், கலப்படம் முன்பை விட பலுகி பெருகிவிட்டது. அதனால் உண்மையான மிளகாய் பொடிகளை அடையாளம் காண்பது எளிமையான காரியம் அல்ல. தமிழ்நாட்டை பொறுத்தவரை மிளகாய் தூள் இல்லாத குழம்பு வகைகள் இல்லை. காரசாரமான உணவு பிரியர்கள் நாம். சிவப்பு மிளகாய் தூள் இல்லாத சமையலறைகளை காண்பது அரிது.
முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மிளகாயை வாங்கி அதை உலர வைத்து, கல்லில் போட்டு இடித்து பொடி செய்து தயார் செய்தனர். இன்றைய காலத்தில் நேரமின்மையால் சந்தையிலேயே மிளகாய் பொடியை நேரடியாக வாங்குகிறோம். ஆனால் இவற்றில் கலப்படம் உள்ளது. போலி பொடிகளை வாங்காமல் தவிர்க்க சில டிப்ஸை காணலாம்.
சிலர் மிளகாய் தூளில் 'சூடான் டை' என்ற வேதிப்பொருளை கலக்கின்றனர். இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது. கலர்பொடி, செங்கல் தூள் கலந்த மிளகாய் பொடியை உண்பதால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைக்கு ஆளாக வாய்ப்பாக அமையும். அதனால் கவனமாக இருங்கள்.
சிவப்பு மிளகாய் பொடி மூலம் நல்ல லாபம் ஈட்ட வர்த்தகர்கள் கலப்படம் செய்கின்றனர். செங்கல் தூள், செயற்கை நிறமூட்டிகள், பழைய மற்றும் கெட்டுப்போன மிளகு, சுண்ணாம்பு தூள் ஆகியவை போலி மிளகாய் தூளில் சேர்க்கப்படுகின்றன. இது மாதிரியான போலிகளைக் கண்டு மக்கள் ஏமாறாமல் இருக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சில வழிமுறைகளை கூறுகிறது.
இதையும் படிங்க: பிரெஷா கேட்டதுக்கு இப்படியா? ஹோட்டலில் சாப்பிடும்போது தட்டில் உயிரோடு துள்ளிய மீன்...!
ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து அதில் 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். இது கரைந்ததும் சிவப்பு நிறம் தனியாக வந்தால் கலப்படம். அடியில் உள்ள மிளகாய் தூளின் மிச்சங்களை கைகளில் தேய்த்து பாருங்கள். கரடுமுரடானதாக நீங்கள் உணர்ந்தால், அதில் செங்கல் தூள் இருப்பதாக அர்த்தம். உங்கள் கைகளில் சோப்பு போல் வழுவழுப்பாக இருந்தால், அதில் சோப்பு பொருள்கள் கலந்திருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: திடீர்னு லோ சுகர் ஆச்சுன்னா என்ன செய்யணும்.. சாக்லேட் சாப்பிட்டால் நல்லதா?