30 நாள்களில் கொட்டிய முடி எல்லாம் மொத்தமா தளிர்க்கும்... இந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து பண்ணா போதும்...

Published : Feb 10, 2023, 05:09 PM ISTUpdated : Feb 10, 2023, 05:20 PM IST

தலையில் குறிப்பிட்ட இடத்தில் முடி கொட்டி மன சங்கடத்தை உண்டாக்கும். அதை எளிதில் சரிசெய்ய டிப்ஸ்..

PREV
15
30 நாள்களில் கொட்டிய முடி எல்லாம் மொத்தமா தளிர்க்கும்... இந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து பண்ணா போதும்...

முடி உதிர்வு பெரும்பாலானவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அழகான அடர்த்தியான கூந்தலை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் சிலருக்கு குறிப்பிட்ட இடத்தில் முடி உதிரும். வட்டமாக பூச்சி அரித்தது போல இருக்கும் இந்த பூச்சி வெட்டு/ புழு வெட்டு நோயால் சிலர் மொட்டையடித்து கொள்வர். 

 

25

நமது தலைமுடியில் பூச்சி வெட்டு ஏற்பட்டால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள முடிகள் உதிரும். அந்த இடத்தில் புதிய முடிகள் வளராது. இது ஆட்டோ இம்யூன் நோய் வகையை சேர்ந்தது. இந்த நோயை ஆங்கிலத்தில் அலோபேசியா அரேட்டா என்றும் சொல்கின்றனர். சிலருக்கு தலையில் உள்ள மொத்த முடியும் உதிர்ந்து வழக்கை ஆகிவிடும். இதனை 'அலோபேசியா டோட்டாலிஸ்' என அழைப்பார்கள். இந்த பிரச்சனை ஏற்பட்டால் வீட்டில் உள்ள பொருள்களை கொண்டு எளிதில் குணமாக்கலாம். 

35

வீட்டில் உள்ள நல்லெண்ணெய், வெள்ளைக் கரிசாலை சாறு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து காய்ச்சி தைலமாக்கி பூச்சி வெட்டு உள்ள இடத்தில் தடவி வந்தால் ஒரு மாதத்தில் முடி வளர ஆரம்பிப்பதை கண்ணால் காண்பீர்கள். 

45

இந்த பூச்சி வெட்டு பெண்களுக்கு தலையில் தான் ஏற்படும். ஆனால் ஆண்களுக்கோ முடி வளரும் இடங்களில் எல்லாம் வருமாம். இந்த நோய் நீரிழிவு பிரச்சனை, தைராய்டு, தோல் வியாதிகள், இரத்தசோகை உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும். குறிப்பாக சொரியாசிஸ் நோய் இருப்பவர்களுக்கு அதிகம் வரலாம். 

55

பக்க நோய்களால் பாதிக்கப்பட்டு தீவிரமான பூச்சி வெட்டு காணப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது நல்லது. ஏனெனில் இவர்கள் மற்ற வீட்டு மருந்துகளை முயற்சி செய்தாலும் பலனளிக்காது. முறையான மருத்துவ சிகிச்சைகளை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். 

இதையும் படிங்க: சில நிமிடங்களில் முகப்பரு காணாம போகணுமா? முகம் பளபளன்னு மாற நல்லெண்ணெய் கூட இந்த பொருளை யூஸ் பண்ணி பாருங்க!!

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு இப்படி குடிச்சு பாருங்க... கொழுத்த தொப்பையும் கரைஞ்சு போய்டும்

Read more Photos on
click me!

Recommended Stories