Teddy Day 2023: பெண்களுக்கு மட்டும் டெடி பியர் ரொம்ப புடிக்குதே, கரடிக்கும் காதலுக்கும் அப்படி என்ன தொடர்பு?

Published : Feb 10, 2023, 10:20 AM IST

Teddy Day 2023: காதலர் வாரத்தில் 4ஆவது நாளான டெடி தினத்தில் (Teddy day) காதலிக்கு டெடி பியரை ஏன் பரிசாக கொடுக்கிறார்கள்? என்பதை இங்கு காணலாம்.   

PREV
15
Teddy Day 2023: பெண்களுக்கு மட்டும் டெடி பியர் ரொம்ப புடிக்குதே, கரடிக்கும் காதலுக்கும் அப்படி என்ன தொடர்பு?

ஆண்டுதோறும் காதலர் வாரத்தின் நான்காவது நாளான பிப்ரவரி 10ஆம் தேதி டெடி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மனம் கவர்ந்த பெண்ணுக்கு மென்மையான பொம்மைகளை பலர் பரிசாக வழங்குவார்கள். பெரும்பாலான பெண்களின் விருப்பத்தேர்வாக டெடி பியர் தான் இருக்கிறது. டெடி பியர் வெறும் பொம்மையாக இல்லாமல் அவர்களின் உணர்வோடு கலந்திருப்பதுதான் அதற்கு காரணம். 

25
Image: Getty Images

பிரியமானவரின் அருகாமை இல்லாத நாள்களில் அவர்கள் பரிசளித்த டெடி பியர் தான் அந்த தனிமையை போக்கும். அதனால் தான் காதலர்கள் டெடி பியரை காதலிக்கு வாங்கி கொடுக்கிறார்கள். டெடி பியர் பொம்மைகள் பார்க்க அழகாகவும், வண்ணமயமாகவும் இருக்கும் என்பதால் பெண்களுக்கு உள்ளம் கவர் பரிசு பொருளாகவே மாறிவிட்டது. டெடி பியரை காதல் துணைக்கு மட்டுமல்ல, குழந்தைகள், பெற்றோர் அல்லது அன்புக்குரியவர் எவருக்கும் சிறந்த பரிசாக கொடுக்க முடியும். ஏனென்றால் டெடி பியர் அரவணைப்பு, அக்கறை, உடனிருக்கும் உணர்வை கொடுக்கும் என நம்பப்படுகிறது. ஆனாலும் டெடி பியர் உருவாக காரணமாக இருந்த கதை தெரியுமா? 

35

டெடி பியர் என்ற பொம்மை உருவாக அமெரிக்காவின் 26வது ஜனாதிபதியான தியடோர் ‘டெடி’ ரூஸ்வெல்ட் தான் காரணம். 1902ஆம் ஆண்டு அவர்  மிசிசிப்பியில் கரடி வேட்டைக்காக சென்றார். அந்த பயணத்தில் உதவியாளர்களும் வேட்டை நாய்களும் கூட இருந்தன. அப்போது ஒரு கரடியை சுற்றி வளைத்த அக்குழு, அதனை மரத்தில் கட்டி வைத்து விட்டு ஜனாதிபதி தியோடர் டெடியை அழைத்துள்ளனர். காயம்பட்டு அனத்திக் கொண்டிருந்த கரடியை சுட்டு தள்ள ஜனாதிபதி தியோடர் டெடி ரூஸ்வெல்ட் மறுத்துவிட்டார். அவரின் இரக்கம் மக்களை கவர்ந்தது. 

45

அந்த நேரத்தில் இந்த சம்பவம் பத்திரிகைகளால் பரவலாக பேசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான அரசியல் கார்ட்டூன் கவனம் ஈர்த்தது. நியூயார்க்கில் பொம்மைக் கடை வைத்திருந்த மோரிஸ் மிச்சோம், அவரது மனைவி ரோஸ் இந்த சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டனர். வியாபார தந்திரத்தை பயன்படுத்தி, புதியதாக கரடி உருவத்தை போலவே ஒரு பொம்மையை உருவாக்கி அதற்கு டெடி பியர் என பெயரிட்டனர். இந்த பொம்மை இரக்கத்தின் அடையாளமாக பிரபலமானது. இதில் 'டெடி' என்பது ஜனாதிபதியின் செல்ல பெயர். 

 

55

பாதுகாப்பு, இரக்கம், அன்பின் அடையாளமாக பிரபலமான டெடி பியரை இப்போது காதலர்கள் பரிமாறி கொள்கிறார்கள். அன்புக்குரியவர்களுக்கு டெடி பியரை பரிசாக கொடுத்து பாருங்கள். நிச்சயம் அவர்கள் முகத்தில் புன்னகை பூக்கும். அது அன்பின் அடையாளமாக வெளிப்படும் உணர்வு கீற்று. டெடி தினத்தில் உங்கள் துணைக்கு அழகான கரடி பொம்மையை பரிசளிக்க தயங்காதீர்கள். 

இதையும் படிங்க: Propose Day: நடிகை ஐஸ்வர்யா ராய்கிட்ட அபிஷேக் எப்படி லவ் சொன்னாரு தெரியுமா? இப்படி சொல்லி ப்ரபோஸ் பண்ணுங்க!

இதையும் படிங்க: Chocolate day: சாக்லேட் தினத்துக்கு இப்படி ஒரு வரலாறா? இது சாக்லேட்டை விட தித்திப்பான விஷயமா இருக்கே!

click me!

Recommended Stories