Mushroom Cleaning Tips : காளான் சமைக்குறப்ப கட்டாயம் 'இப்படி' கிளீன் பண்ணுங்க; இல்லாட்டி ஆபத்து!

Published : Sep 10, 2025, 10:39 AM IST

காளான் சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
Mushroom Cleaning Tips

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே காளான் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சில சமயங்களில் காளான் சமைத்து சாப்பிடும் போது அதில் மண் வாசனை அடிக்கும். அதுமட்டுமில்லாமல் வயிற்றுப்போக்கு, வயிற்று வலியையும் ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் காளானை சரியாக முறையில் சுத்தம் செய்யாமல் இருப்பது ஆகும். ஏனெனில் காளான் மேற்புறத்தில் நிறைய மண் மற்றும் அழுக்குகள் இருக்கும். இதுதவிர காளான் ஒரு பூஞ்சை தாவரம் என்பதால் அதில் ஆபத்தான பூஞ்சை தொற்றுகளும் இருக்கும். அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த பதிவில் காளான் சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

24
வெதுவெதுப்பான நீர்

காளானை சூடான நீரில் போட்டு சுத்தம் செய்யலாம். ஆனால் அதிகமாக கொதிக்க வைத்து நீரில் அல்ல, வெதுவெதுப்பான அல்லது கை பொறுக்கும் அளவுக்கு சூடு இருந்தாலே போதும். வெதுவெதுப்பான நீரில் காளானை போட்டு அதன் மேற்பரப்பில் இருக்கும் அழுக்குகள், பூஞ்சைகளை உங்கள் கைகளால் நீக்கவும்.

34
உப்பு மற்றும் மஞ்சள்

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது சூடான நீரில் சுத்தம் செய்து வைத்திருந்த காளைனை இதில் போட்டு சுமார் 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இப்படி நீங்கள் காளானை வைப்பதன் மூலம் அதில் இருக்கும் அழுக்குகள், கிருமிகள், பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.

44
சுத்தமான தண்ணீர்

உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் காளானை ஊற வைத்த பிறகு அதை மீண்டும் சுத்தமான நீரில் போட்டு நன்கு கழுவவும். இப்படி நீங்கள் காளானை சுத்தம் பண்ணும் போது அதில் மீதி இருக்கும் அழுக்குகள், பாக்டீரியாக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.

மேலே சொன்ன முறைகள் படி நீங்கள் காளான் சுத்தம் செய்து சமைத்து சாப்பிடுங்கள். எந்தவித ஆபத்துகளும் ஏற்படாது. மண்வாசனையும் அடிக்காது.

Read more Photos on
click me!

Recommended Stories