Cream Biscuits : பெற்றோரே! குழந்தைக்கு 'இதை' வாங்கி கொடுக்காதீங்க; கிரீம் பிஸ்கெட் குறித்த மோசமான உண்மை

Published : Sep 09, 2025, 02:46 PM IST

கிரீம் பிஸ்கெட்டுகள் குழந்தைகளுடைய உயிருக்கு ஆபத்தை வரவழைக்கும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

PREV
16

சாதாரண பிஸ்கெட்டுகளை விட கிரீம் பிஸ்கெட்களை யான் குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர். குழந்தைகள் அடம்பிடித்ததும் பெற்றோரும் அதை வாங்கி கொடுக்கின்றனர். ஆனால் அப்படி வாங்கி கொடுப்பது குழந்தைகளுக்கு இழைக்கும் அநீதி என்கிறனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். பிஸ்கெட்டுகளே ஆரோக்கியமற்றவைதான். அதிலும் கிரீம் பிஸ்கெட்டுகள் கூடுதல் மோசம். இந்தப் பதிவில் கிரீம் பிஸ்கெட்டுகள் குழந்தைகளுக்கு எவ்வாறு ஆபத்தை வரவழைக்கும் என்பதை காணலாம்.

26

தித்திக்கும் இனிப்புடன் இருக்கும் கிரீம் பிஸ்கெட்கள் முழுக்க கெட்ட கொழுப்பு தான். இந்த பிஸ்கெட்டுகளில் வைக்கப்படும் கிரீம்கள் எல்லாமே டிரான்ஸ் ஃபேட். இது குழந்தைகளுக்கு எந்த நன்மையையும் செய்யாது. காய்கறி கழிவில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பை தான் பிஸ்கெட்டுகளுக்கு நடுவில் கிரீம் என்ற பெயரில் வைக்கிறார்கள். இனிப்பு சுவைக்கு சர்க்கரை சிரப் ஊற்றி, கலருக்கு செயற்கை நிறமிகள் கலந்து அதோடு நிறுத்தாமல் சுவையை அதிகரிக்க பல கெமிக்கல்களை சேர்த்து தான் கிரீம் பிஸ்கெட் உருவாகிறது. இதனுடன் கெடாமல் இருக்க சேர்மானங்களும் (preservatives) சேர்க்கப்படுகிறது.

36

கிரீம் பிஸ்கெட்டுகளில் உள்ள காய்கறி கொழுப்பு, நல்லதல்ல. இது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். இதை அடிக்கடி உண்பதால் மாரடைப்பு, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை குழந்தைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு சிறு வயதிலே சர்க்கரை நோய் பாதிப்பு வரவும் கிரீம் பிஸ்கெட்டுகள் மாதிரியான கெட்ட கொழுப்பு உணவுகள் காரணமாகிறது.

46

வயிறு, இடுப்பை பகுதியை சுற்றி கிரீம் பிஸ்கெட்டுகளில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு படிவதால் கல்லீரலிலும் பிரச்சனை வரக்கூடும். வளர்சிதை மாற்றத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. நாளடைவில் செரிமானம் கூட பாதிப்படையும். நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறையலாம்.

56

இந்த பிஸ்கெட்டுகளை கவர்ச்சியாக மாற்ற கண்ணை கவரும் வண்ணங்களில் கிரீம்கள் வைக்கப்படுகிறது. இப்படி நிறத்தை அதிகரிக்க சேர்க்கப்படும் சில சேர்மானங்கள் குழந்தைகளுடைய நரம்பு மண்டலத்தையே பாதிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவாக மாறிவிடுவார்கள். விரைவில் எரிச்சலடைவார்கள். ADHD , ஒவ்வாமை, நோயெதிர்ப்பு சக்தி குறைதல் ஆகிய பிரச்சனையும் வரலாம்.

66

இந்த பிஸ்கெட்டுகளிலுள்ள அதிகளவிலான சர்க்கரை இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென உயர்த்தும். இதனால் அதிக பசி எடுக்கலாம். உடல் பருமன், நீரிழிவு நோய்க்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு சிறுவயதில் கொழுப்பு கல்லீரல் நோய் கூட வரலாம். குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக வாங்கிக் கொடுக்கும் கிரீம் பிஸ்கெட்டுகளை தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால் அதில் கண்ணுக்கு தெரியாமல் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இதை குழந்தைகளுக்கு வருடத்தில் ஒருநாள் ஆசைக்கு கொடுக்கலாமே தவிர அடிக்கடி கொடுக்கக் கூடாது. குழந்தைகள் மிகவும் ஆசைப்பட்டு கேட்டால் வீட்டிலேயே கருப்பட்டி போட்டு சிறு தானியங்களில் பிஸ்கெட் செய்து கொடுக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories