Black Coffee Benefits : உண்மையாவா? பால் காபிக்கு பதிலா பிளாக் காபி! ஒரு மாசம் குடித்தால் ஆளே மாறிடுவீங்க!!

Published : Sep 09, 2025, 07:00 PM IST

நீங்கள் காபி பிரியரா? அப்படியானால் ஒரு மாசம் பிளாக் காபி குடியுங்கள். உங்களது உடலில் பல மாற்றங்கள் நடக்கும்.

PREV
15
Black Coffee Benefits

பொதுவாக நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் பால் டீ அல்லது பால் காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் நீங்கள் காபி பிரியராக இருந்தால் பால் காபிக்கு பதிலாக பிளாக் காபி குடிப்பது உடலுக்கு பல வகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆம், பிளாக் காபியுடன் உங்களது நாளை தொடங்கினால் அதில் இருக்கும் காஃபின் உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்கும், நரம்பு மண்டலத்தையும் தூண்டும். எனவே, ஒரு மாதத்திற்கு நீங்கள் தினமும் காலையில் பிளாக் காபி குடித்து வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
கவனத்தை சீராக்கும்

காபி ஒரு சிறந்த ஆற்றல் முக்கிய ஆகும். காலையில் காபி குடித்து வந்தால் கவனத்தை வழங்கும். காபியில் இருக்கும் காஃபின் தூக்கம், சோர்வை தடுக்க உதவுகிறது. ஒரு மாதம் முழுவதும் தினமும் காலை காபி குடித்து வந்தால் நீங்கள் நாள் முழுவதும் கவனத்துடன் இருப்பீர்கள்.

35
மன ஆரோக்கிய மேம்படும்

நாளின் ஆரம்பத்தில் நீங்கள் மன சோர்வுடன் இருந்தால் ஒரு கப் பிளாக் காபி குடியுங்கள். பிளாக் காபியில் இருக்கும் காஃபின் மூளையில் செரோடோனின் அளவை அதிகரித்து, உங்களது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு உற்சாகமாக உணருவீர்கள். தொடர்ந்து ஒரு மாதம் காபி குடித்து பாருங்கள். உங்களது மனநிலையில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

45
வளர்ச்சியை மாற்றம் மேம்படும்

ஆய்வுகள் படி, கருப்பு காபி வளர்ச்சியை மாற்றத்தை துரிதப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனஎ. மேலும் இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. பிளாக் காபி குறைந்த கலோரிகள் கொண்டவை என்பதால், எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தங்களது டயத்தில் இதை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் ஒரு மாதம் நீங்கள் பிளாக் காபி குடித்து வந்தால் எடை இழப்பில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

55
முக்கிய குறிப்பு :

- பிளாக் காபி குடித்தால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை அளவுக்கு அதிகமாக குடித்தால் எரிச்சல் உணர்வை தூண்டும்.

- வெறும் வயிற்றில் ஒருபோதும் பிளாக் காபி குடிக்கவே கூடாது. இல்லையெனில் வயிற்றில் அமிலத்தை அதிகரித்து அமிலத்தன்மையை ஏற்படுத்தி விடும். உணர்திறன் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடித்தால் பதட்டம், நடுக்கம், பீதியை ஏற்படுத்திவிடும்.

- பிளாக் காபியின் நன்மைகளை பெற ஒரு நாளைக்கு 2 கப்புக்கு மேல் குடிக்கவே வேண்டாம்.

Read more Photos on
click me!

Recommended Stories