மிக்ஸி இயங்கும்போது, ஐஸ் கட்டிகள் ஜாரின் உள்பக்கத்திலும், பிளேடிலும் வேகமாக மோதும். இதனால், பிளேடைச் சுற்றி இருக்கின்ற பிசுக்கும், அழுக்கும் இளகி வந்துவிடும். அதே நேரத்தில், திரவ சோப் நுரையை உருவாக்கி, எண்ணெய் பிசுக்கை நீக்க உதவும். கடைசியாகத் தண்ணீரில் கழுவும்போது, ஜார் புதிது போலப் பளபளவென்று ஆகிவிடும்.
மிக்ஸி ஜாரை சுத்தம் செய்யும்பொது இதையும் கவனிக்கனும்
- மிக்ஸி ஜாரைச் சுத்தம் செய்யும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- மிகவும் சூடான ஜாரில் உடனே ஐஸ் கட்டிகளைப் போடாதீர்கள்.
கலக்கிய பிறகு (Blend செய்த பிறகு), ஜாரை நன்றாகத் தண்ணீரில் கழுவுங்கள். சோப் எதுவும் உள்ளே தங்கிவிடக் கூடாது.
இந்தக் குறிப்பைத் தேவைப்படும்போது, குறிப்பாக ஜாரில் அதிகமாகப் பிசுக்கு சேர்ந்திருக்கும்போது பயன்படுத்தலாம்.