Water Bottle Cleaning Tips : வாட்டர் பாட்டில் கெட்ட வாடை வருதா? ஒரு நொடியில் நீக்கும் டிப்ஸ்!!

Published : Jun 21, 2025, 07:33 PM IST

வாட்டர் பாட்டிலில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றி சுத்தம் செய்தால் போதும். அவை என்ன என்று இப்போது பார்க்கலாம்.

PREV
15
வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்வது எப்படி?

நம் எல்லோருடைய வீடு, ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் என எல்லா இடத்திலையும் வாட்டர் பாட்டில் பயன்படுத்துவது சகஜம்தான். வாட்டர் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக இருந்தாலும் சில சமயங்களில் அதிலிருந்து ஒரு விதமான கெட்ட வாடை அடிக்கும். எவ்வளவுதான் அதை சோப்பு போட்டு சுத்தம் செய்தாலும் அந்த கெட்ட வாடை மட்டும் போகவே போகாது. இதனால் அதில் தண்ணீர் குடிப்பதற்கு கூட சிரமமாக இருக்கும் அல்லது முடியாமல் போகும். அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பற்றி சொல்லவே தேவையில்லை. ஏனெனில் கெட்டவாடை அதில் ரொம்பவே அதிகமாக அடிக்கும். இப்படி வாட்டர் பாட்டிலில் கெட்டவாடை வருவதற்கு முக்கிய காரணம் இருப்பது தான். உங்கள் வாட்டர் பாட்டிலிலும் இப்படி கெட்ட வாடை அடிக்கிறதா? அதை தூக்கி போட மனமில்லை என்றால், அதை எப்படி வாடை இல்லாமல் பளிச்சுன்னு சுத்தம் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

25
1. வினிகர் :

உங்க வாட்டர் பாட்டிலில் கெட்ட வாடை வந்தால் அதற்கு சூப்பரான தீர்வு வினிகர் தான். இதற்கு வாட்டர் பாட்டிலில் பாதி அளவு சூடான தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு பாதி அளவு வெள்ளை வினிகரை ஊற்ற வேண்டும். இப்போது வாட்டர் பாட்டிலை இறுக்கமாக மூடி சுமார் பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அடுத்ததாக பாட்டிலை நன்றாக குலுக்கி அதிலிருந்து தண்ணீரை வெளியே கொட்டி விடுங்கள். இப்போது ஒரு பிரஷ் கொண்டு பாட்டில் உள்ளே நல்ல தேய்ச்சு சுத்தம் செய்யுங்கள். பிறகு வெறும் தண்ணீரில் கழுவ வேண்டும். இப்போது பாட்டிலில் கெட்ட வாடை அடிக்காது. வினிகர் வாசனையும் போய்விடும். மேலும் பாட்டில் பார்ப்பதற்கு புதுசு மாதிரி பளபளனு இருக்கும்.

35
2. பேக்கிங் சோடா :

பாட்டில் சுத்தம் செய்வதற்கு உங்க வீட்டில் வினிகர் இல்லை என்றால் கவலைப்படாதீங்க. பேக்கிங் பாட்டிலை சுத்தம் செய்யலாம். இதற்கு பாட்டிலில் சிறிதளவு சூடான நீரை ஊற்றி, அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது பாட்டிலை நன்றாக மூடி, ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு மறுநாள் காலையில் பாட்டிலை நன்றாக குலுக்கி அதிலிருந்து தண்ணீரை வெளியே கொட்டி விடுங்கள். பிறகு ஒரு பிரஷ் கொண்டு பாட்டில் உள்ளே நன்றாக சுத்தம் செய்யவும். இறுதியாக வெறும் தண்ணீரில் பாட்டிலை அலசுங்கள். இப்போது உங்கள் வாட்டர் பாட்டிலில் அடிக்கும் கெட்ட வாயிடை போய்விடும், பாட்டிலும் சுத்தமாகிடும்.

45
3. எலுமிச்சை சாறு மற்றும் உப்பு :

எலுமிச்சை மற்றும் உப்பு இவை இரண்டும் எல்லார் வீட்டு கிச்சனிலும் கண்டிப்பாக எப்பவுமே இருக்கும். இப்போது பாட்டிலை சுத்தம் செய்ய ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதையிலிருந்து சாற்றை பிழிந்து பாட்டிலில் ஊற்ற வேண்டும். அடுத்து அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது பாட்டிலை நன்றாக மூடி குலுக்கி சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு ஒரு பிரஷ் கொண்டு நன்றாக தேய்த்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும். இப்போது பாட்டிலில் கெட்ட வாடை நீங்கி எலுமிச்சை வாசனை தான் அடிக்கும்.

55
நினைவில் கொள் :

நீங்கள் ஒவ்வொரு முறையும் வாட்டர் பாட்டில் பயன்படுத்தும் போது அதை சூடான தண்ணீரில் அலச வேண்டும். சிறிதளவு சோப்பு போட்டு கூட கழுவலாம். அது மட்டும் இன்றி ஒரே பாட்டிலை நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டாம். அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டிலை நீண்ட நாள் மாற்றாமல் பயன்படுத்தினால் அதில் சீக்கிரமாகவே பாக்டீரியா வளர்ந்துவிடும் ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பாட்டிலை மாற்றுவது தான் உங்களது ஆரோக்கியத்திற்கு நல்லது.

மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றி உங்களது வாட்டர் பாட்டிலை சுத்தமாக வச்சிக்கோங்க..

Read more Photos on
click me!

Recommended Stories