ac or air cooler: உங்கள் வீட்டின் அளவிற்கு ஏற்ற ஏசி அல்லது ஏர்கூலரை தேர்வு செய்வது எப்படி?

Published : Jun 08, 2026, 03:51 PM IST

கோடை காலத்தில் ஏசி அல்லது ஏர்கூலர் வாங்குவதில் பலருக்கும் குழப்பம் வரும். ஆனால், பிறர் சொல்வதைக் கேட்டு அவசரமாக வாங்கினால், அதிகப்படியான மின்சாரக் கட்டணம் உங்கள் பணத்தை வீணடித்துவிடும் என்பதால் சிந்தித்துத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

PREV
16
100 சதுர அடி ரூமா?

உங்க பெட்ரூம் அல்லது படிக்கும் அறை 10x10 (100 Sq.Ft) அளவில் சிறியதாக இருந்தால், அதுதான் மேட்ச் பாக்ஸ் சைஸ். இதற்கு 0.8 டன் முதல் 1 டன் வரையிலான ஏசி போதும். கூலர் வாங்குவதானால் 20 முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 'பர்சனல் கூலர்' (Personal Cooler) கச்சிதமாக இருக்கும்.சிறிய அறைக்கு அதிக டன் ஏசி வாங்கினால், ரூம் சீக்கிரம் குளிர்ந்து ஏசி அடிக்கடி ஆஃப் ஆகும். இதனால் கரண்ட் பில் எக்கச்சக்கமாக எகிறும்!

26
150 சதுர அடி ஹால்?

நடுத்தர அளவுள்ள லிவிங் ரூம் அல்லது பெரிய மாஸ்டர் பெட்ரூம் (உத்தேசமாக 150 சதுர அடி) வைத்திருப்பவர்களுக்கான சாய்ஸ் இது. இதற்கு 1.5 டன் ஏசி தான் கரெக்ட். கூலர் பிரியராக இருந்தால், 40 முதல் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட 'டவர் கூலர்' (Tower Cooler) வாங்கலாம். இது இடத்தை அடைக்காமல் மூலையில் கச்சிதமாக உட்காரும். உங்கள் வீட்டு ஹால் மேற்கு திசையை நோக்கி இருந்தாலோ, அல்லது வெயில் நேரடியாக அடித்தாலோ கண்ணை மூடிக்கொண்டு 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி (Inverter AC) எடுப்பது தான் புத்திசாலித்தனம்.

36
200+ சதுர அடி பெரிய ஹால்?

கூட்டுக் குடும்பமாக பெரிய ஹாலில் வசிப்பவர்கள் அல்லது ஓப்பன் கிச்சன் வசதி கொண்ட வீடுகளுக்கு தாராளமாக 2 டன் ஏசி தேவைப்படும். ஏர்கூலர் என்றால் 60 முதல் 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய 'டெசர்ட் கூலர்' (Desert Cooler) வாங்க வேண்டும். டெசர்ட் கூலர்கள் பெரிய அறையை நொடியில் குளிர்விக்கும், ஆனால் அதற்கு வீட்டின் ஜன்னல் கதவுகள் திறந்து இருக்க வேண்டும் (Cross Ventilation). இல்லையென்றால் அறைக்குள் புழுக்கம் அதிகமாகிவிடும்!

46
மாடி வீடா? "ஒரு டன் எக்ஸ்ட்ரா" கூட்டிக்கோங்க!

பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு ரூம் சைஸை மட்டும் பார்ப்பது தான். உங்கள் வீடு மொட்டை மாடிக்கு கீழே (Top Floor) இருந்தால் இந்த விதியை மறக்காதீங்க. மொட்டை மாடி வெயில் நேரடியாக கூரையில் இறங்குவதால், வழக்கமான கணக்கை விட 0.5 டன் முதல் 1 டன் வரை கூடுதலாக உள்ள ஏசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 100 சதுர அடி அறைக்கு 1 டன் போதும் என்றாலும், மாடி வீட்டுக்கு 1.5 டன் வாங்கினால் தான் ரூம் குளிரும், ஏசியும் வீணாகாமல் உழைக்கும்!

56
ஜன்னல் அளவு மற்றும் ஆட்கள் கணக்கு :

ரூமில் எத்தனை பேர் இருக்கீங்க, எவ்வளவு ஜன்னல் இருக்கு என்பதும் முக்கியம். ஒரு அறையில் தொடர்ந்து 3 பேருக்கு மேல் இருக்கிறீர்கள் என்றாலோ, அல்லது பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியாக வெயில் உள்ளே வந்தாலோ ஏசியின் லோடைக் கூட்ட வேண்டும். பெரிய ஜன்னல்கள் இருந்தால் ஏசி வாங்கும் முன் தடிமனான 'தெர்மல் கர்ட்டன்ஸ்' (Thermal Curtains) போடுங்கள். இது ஏசியின் டன் அளவைக் குறைக்க உதவி, பணத்தை மிச்சமாக்கும்.

66
பட்ஜெட் vs மெயின்டனன்ஸ் ட்ரிக் :

காசு இருக்கேன்னு ஏசி வாங்கக் கூடாது, பராமரிக்கும் வசதி இருக்கான்னு பார்த்து தான் வாங்கணும். ஏர்கூலர் வாங்க சில ஆயிரங்கள் போதும், சாதாரண தண்ணீரே போதும். ஆனால், ஏசி வாங்க பல்லாயிரங்கள் செலவாவதுடன், வருடத்திற்கு இரண்டு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். உங்கள் ஊரில் காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகம் உள்ள கடற்கரை பகுதியா? ஏசி மட்டுமே வேலை செய்யும் (கூலர் செட் ஆகாது). வறண்ட வெயில் அடிக்கும் பகுதியா? ஏர்கூலர் செம்ம பட்ஜெட் ப்ரெண்ட்லி சாய்ஸ்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories