Walking tips in tamil
உடல் எடையை குறைப்பதற்கு பல விஷயங்களை மக்கள் முயன்று வருகின்றனர். ஆனால் அதற்கு எளிமையான எளிமையான பயிற்சி நடைபயிற்சிதான். தினமும் குறிப்பிட்ட நேரம் நடப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நடப்பது அதிகமான கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் சிலருக்கு எவ்வளவு நேரம் நடப்பது என தெரியாது. அவர்களுக்கான பதிவு இது. வாங்க பார்க்கலாம்.
walking health benefits in tamil
எடை மேலாண்மை:
உடல் எடையை குறைக்க நம் உடலில் உள்ள அதிகமான கொழுப்பை பயன்படுத்த வேண்டும். எப்போது அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறதோ அந்த நேரத்தில் தான் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிகமான கலோரிகளை எரிக்க முடியும். அதிகமான கலோரிகளை எரிக்கக்கூடிய மிதமான பயிற்சிதான் நடைபயிற்சியாகும். நாம் நடக்கும் வேகத்தை பொறுத்து கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: 10,000 காலடிகள் நடக்குறீங்களா? உடனே நிறுத்துங்க.. 'வாக்கிங்' பத்தின தவறான புரிதல்
How much walking for weight loss in tamil
எவ்வளவு கலோரிகள் எரிக்கலாம்?
நீங்கள் 55 கிலோ எடை கொண்டவராக இருந்தால் மணிக்கு 3.2 கிமீ வேகத்தில் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் 1 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 108 கலோரிகளை நீங்கள் எரிக்க முடியும். இதே நபர் மணிக்கு 4.8 கிமீ வேகத்தில் நடக்கும் போது 179 கலோரிகளை எரிக்கலாம். அதுவே அவர் கூடுதல் வேகத்தில் அதாவது மணிக்கு 5.6 கிமீ வேகத்தில் நடந்தால் 206 கலோரிகளை எரிக்க முடியும். அதே நபர் மணிக்கு 8 கி.மீ நடந்தால் 489 கலோரிகளை எரிக்கலாம்.
Weight loss walking plan in tamil
82 கிலோ எடையுள்ளவராக நீங்கள் இருந்தால் மணிக்கு 4.8 கிலோமீட்டர் வேகத்தில் நடக்க வேண்டும். இப்படி நடப்பதால் ஒரு மணி நேரத்திலேயே 270 கலோரிகளை உங்களால் எரிக்க முடியும். சற்று கூடுதல் வேகத்துடன் 6.4 கிலோ மீட்டர் வேகத்தில் நடந்தால் 410 கலோரிகளை கூட எரிக்கலாம். இதுவே 8 கிமீ வேகமென்றால் 738 கலோரிகள் எரிக்கப்பட.
வாய்ப்புள்ளது.