வீட்டில் எலிகள் அதிகமாக இருந்தால் ஒரு பொருளை வைக்க முடியாது. எல்லா பொருளையும் கொறித்து நாசமாக்கிவிடும். அவற்றை கொல்ல உங்களுக்கு விருப்பம் இல்லை.. விரட்டியடித்தால் போதும் என்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு நல்ல உதவியாக இருக்கும்.
எலி எச்சங்களை அடிக்கடி சுத்தம் செய்து வீட்டை சுத்தமாக வையுங்கள். எலிகளின் எச்சம் பூச்சிகளை ஈர்க்கும். இதனால் பூச்சி தொல்லையும் வரத் தொடங்கும். இருட்டான குப்பை இடங்களை எலிகள் விரும்பும். அதனால் வீட்டை காற்றோற்றமாக, வெளிச்சத்துடன் சுத்தமாக வையுங்கள். வீட்டு சாக்கடை குழாய், சிங்க் குழாய், கழிவறை ஓட்டைகளை ஒழுங்காக மூடி பராமரியுங்கள்.
புதினா வாசனை...
எலிகள் எந்த இடங்களில் அதிகமாக அட்டகாசம் செய்கிறதோ அந்த இடத்தில், புதினா எண்ணெய்யை ஒரு துண்டு பஞ்சில் நனைத்து வையுங்கள். உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளில் இந்த புதினா எண்ணெய் நனைத்த பஞ்சை வையுங்கள். எலிகள் படிப்படியாக மறைந்துவிடும். மேலும் புதினா ப்ளேவர்டு ஸ்பேரே பயன்படுத்தலாம். எலிகளுக்கு புதினாவின் நறுமணம் பிடிக்காது, உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடும்.
மிளகு...
கொஞ்சம் கூட காசு செலவு வைக்காத முறை இது தான். வீட்டு சமையலறையில் இருக்கும் மிளகை பொடித்து கொள்ளுங்கள். எலி வரும் பகுதிகளில் வீட்டு மூலை முடுக்குகளில் எல்லாம் மிளகுப் பொடியை தூவி விடுங்கள். இந்த மிளகு நெடி எலிகளை விரட்டி விடும்.