குளியல் அறையில் :
அடுத்தபடியாக நம்மில் அதிகமானோர் வீடுகளில் பாத் ரூமில் கண்ணாடி வைத்திருப்பார்கள். பொதுவாக பாத் ரூமில் கண்ணாடி வைப்பதை கூடுமான வரை தவிர்த்தல் நல்லது. அப்படி கண்டிப்பாக தேவைப்படும் எனில் , குளிக்கும் போது குழிமுக நபர்களின் பிம்பம் கண்ணாடியில் தெரியாத வாறு இருத்தல் வேண்டும். மேலும் வடக்கு திசையிலிருக்கும் சுவற்றில் அல்லது கிழக்கு திசையிலிருக்கும் சுவற்றில் தான் வைக்க வேண்டும்.
மாறாக தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்கும் சுவர்களில் கண்ணாடி இருப்பின் வீட்டில் உள்ள நபர்களுக்கு நோய்கள் வரக்கூடும்.தவிர மனதில் பயம் மற்றும் குழப்பம் ஏற்படும் .
நிலை வாசலில்:
ஒரு சிலர் வீட்டு நிலை வாசலில் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு இது அதிர்ஷ்டத்தை தரும் ஆனால் ஒரு சிலருக்கு இப்படி கண்ணாடி வைப்பதால் பிரச்சினைகள் எழக்கூடும்.
நிலைவாசலில் கண்ணாடி வைப்பதால் ஒரு சிலருக்கு பணப்பிரச்சனையும் , ஒரு சிலருக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள்எழும். இம்மாதிரியான பிரசச்னைகள் எழுந்தால் நிலை வாசலின் மேல் இருக்கும் கண்ணாடியை எடுத்து வீட்டிற்குள் ஒரு சுவற்றில் மாட்டி விடுங்கள்.
அதே நேரத்தில் வீட்டிற்கு உள்ளே வருபவர்கள், வீட்டிற்குள் நுழைந்தவுடன் கண்ணாடியை பார்க்கும் விதமாக இருத்தல் வேண்டும். நிலைவாசல் என்பது அஷ்டலக்ஷ்மிகள் மற்றும் மஹாலக்ஷ்மியும் வாழும் இடமாக இருப்பதால் அங்கே கண்ணாடியை வைத்தால் வீட்டின் உள்ளே வருபவர்களுடைய எண்ணங்களை அக்கண்ணாடி தன்னகத்தே அவைகளை உள்வாங்கும்.
மேலும் கண்ணாடி அங்கே இருப்பதால் அவ்விடத்தின் இறை சக்தியை குறைந்து போகும் என்பதற்காகவே நிலை வாசலின் மேல் கண்ணாடியை வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள்