sleep effects: இரவில் தூங்காமல் இருந்தால் மாரடைப்பு போன்ற நோய்கள் அபாயம்.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!

First Published Mar 17, 2023, 4:41 PM IST

சரியாக தூங்காதவர்களுக்கு மாரடைப்பு மாதிரியான இதய நோய் அபாயங்கள் அதிகமாக உள்ளது. 

நாம் ஆரோக்கியமாக வாழ நல்ல மற்றும் அமைதியான தூக்கம் முக்கியம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நமது தூக்கத்தை அடிக்கடி சமரசம் செய்துவிடுகிறோம். ஒருவரது தூக்கமின்மை அவரின் மனநலனை பாதித்து கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். இந்த சூழலில் தூக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் உலக தூக்க தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டின் சர்வதேச தூக்க தினமான இன்று, ஒருநாளுக்கு எத்தனை மணி நேர தூக்கம் முக்கியம் அதன் விளைவுகள் குறித்து காணலாம். 

ஒரு நபர் தினமும் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? 

நாம் சரியாக தூங்காவிட்டால் உடலில் அந்த பாதிப்பு நாளடைவில் வெளிப்படும். நாள் முழுக்க சோர்வு, கவனமின்மை, பதட்டம், மனச்சோர்வு, உயர் இரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகள் முதன்மையானவை. வெளிப்படையாக தெரிய கூடியவை. இதுமட்டுமில்லாமல் சரியான தூக்கமில்லாத நபர்களுக்கு அதிக பசி எடுக்கும். சர்க்கரை அளவு ரொம்ப அதிகமாகும். இது மாதிரியான எதிர்மறை விளைவுகளால் மாரடைப்பு, பக்கவாதம், இதய பிரச்சனை கூட விரைவில் ஏற்படலாம். 

திடீர் மரணம் 

சரியான தூக்கமின்மை, முறையான உணவு பழக்கங்கள் இல்லாமல் வெறுமனே உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பல பாதிப்புகள் உண்டாகி வருகிறது. அண்மையில் பல இளைஞர்களும் மாரடைப்பால் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு போதுமான உறக்கம் இல்லாததும் முக்கிய காரணம்.  

இதய பாதிப்பு 

தூக்கமின்மை ஒருவரின் இதயத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கலாம். இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். ஒருவரின் தமனிகளில் கொலஸ்ட்ரால் படியும் அபாயத்தை தூக்கமின்மை தான் உயர்த்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதயத் தமனிகளில் அடைப்பை ஏற்படுவதால் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகப்படுத்துகிறது. டிமென்ஷியா எனும் மனநோய் வருகிறது. 

உடல் எடை அதிகரிப்பு 

தூக்கமின்மை ஒருவரின் உடல் பருமனை அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் கொலஸ்ட்ரால் அளவையும் கூட்டுவதால் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். இரவு நேரத்தில், இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும், இதை இரவு நேர உயர் இரத்த அழுத்தம் என்பார்கள். இது மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும். 

இதையும் படிங்க: Summer health tips: வெயில் காலத்தில் வரும் சரும நோய்களுக்கு முற்றுப்புள்ளி! இந்த 4 விஷயங்களை கட்டாயம் பண்ணுங்க

தூக்கம் இல்லையா.. நோய் வரும்..! 

தூக்கமின்மையால், பக்கவாதம், நீரிழிவு நோய் அபாயம் ஏற்படுகிறது. இதனால் இதய நோயின் அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சரியாக தூங்காதவர்களுக்கு சரும பிரச்சனைகளும் ஏற்படும். ஒரு நபரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சராசரியாக 7 முதல் 8 மணி நேர நல்ல தூக்கம் தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

இதையும் படிங்க: water bottles: தண்ணீர் பாட்டிலில் டாய்லெட் சீட்டை விட 40,000 மடங்கு மோசமான பாக்டீரியா இருக்கு..அதிர்ச்சி தகவல்

click me!