Mouth Ulcer: மழைக்காலங்களில் வரும் வாய்ப்புண்...? ஒரே நாளில் போக இயற்கை வீட்டு வைத்தியம்...

First Published Aug 5, 2022, 9:43 AM IST

Mouth Ulcer Problem: மழைக்காலங்களில் ஏற்படும் வாய்ப்புண்களை எப்படி வீட்டு மருத்துவம் மூலம் எளிமையாக குணமாக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 


நாம் உண்ணும் உணவை பக்குவமாக உமிழ் நீர் சேர்த்து அரைத்து வயிற்றுக்கு அனுப்பும் முக்கிய வேலையை செய்கிறது வாய். வாயில் புண் ஏற்பட்டால் இந்த வேலையை முழுமையாக செய்ய முடியாது. பல தொந்தரவுகளை உருவாக்கும். அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட்டால்போதும் என்கிற மனப்பாங்கு தான் அனைவருக்கும் இருக்கும். ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்பட்டு விட்டால், நாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும். இவை சரியாக ஒரு சில வாரங்கள் கூட எடுத்துக் கொள்ளும். அப்படியான சூழலில் நீங்கள் வீட்டு மருத்துவம் மூலம் வாய்ப்புண் குணமாக்க சில முயற்சி எடுக்கலாம்.

மேலும் படிக்க....Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்

மணத்தக்காளி கீரை

வாய்ப்புண் ஏற்பட்டவர்கள் தினமும் மணத்தக்காளி சாறை புண் மீது படும்படி வாயில் சிறிது நேரம் வைத்தால், ஒரு சில நாட்களில் குணமாகிவிடும். பொதுவாக குடல் புண்கள் இருந்தால் மணத்தக்காளி சாப்பிடுவது நாட்டு வைத்தியத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

பசு நெய்:

பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.

honey

தேன் 

தேனில் பொதுவாக வைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. இவை உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. வாய்ப் புண் இருக்கும்போது, அந்த இடத்தில் சிறிது தேன் தடவுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் வாய்ப்புண் ஆறுவதற்கான அறிகுறிகள் தென்படும். 

மேலும் படிக்க....Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்

நெல்லிக்காய்:

நெல்லிக்காய் இலைகளை வேகவைத்த நீரில், அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும்.

துளசி:

துளசி, வாய்ப்புண்களுக்கும் நல்ல அருமருந்து.  இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஆயுர்வேதத்தின் படி, துளசியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு உள்ளிட்ட பண்புகள், புண்களை குணமாக்க வெகுவாக உதவுகின்றன.

மேலும் படிக்க....Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும் 

எனவே , வாய்ப்புண் ஏற்படாமல் தடுக்க ஜீரணக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் குளிர்ச்சியாக ஐந்து கொள்ள வேண்டும். பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக பராமரிக்கவேண்டும்.  மனஅழுத்தம் ஏற்படாதவாறு இருக்க வேண்டும்.
 

click me!