Kovil Puliyotharai: கோவில் புளியோதரை ஸ்டைலில் சூப்பரான புளியோதரை ரெசிபி..குக்கரில் குழையாமல் செய்வது எப்படி..?

Published : Aug 05, 2022, 07:02 AM IST

Kovil Puliyotharai: குக்கரில் புளியோதரை சுலபமாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து வைத்து கொள்வோம்.

PREV
14
Kovil Puliyotharai: கோவில் புளியோதரை ஸ்டைலில் சூப்பரான புளியோதரை ரெசிபி..குக்கரில் குழையாமல் செய்வது எப்படி..?
Kovil Puliyotharai:

கோவில் பிரசாதங்களில் புளியோதரைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. புளியோதரை என்றாலே புளி காய்ச்சல் செய்து அதனுடன் தேவையான அளவிற்கு வடித்த சாதத்தை கலந்து வைப்பது தான் என்று நினைத்திருப்போம் ஆனால் குக்கரில் ரொம்பவும் சுலபமாக இரண்டு விசிலில் சட்டுன்னு சூப்பரான, டேஸ்டியான புளியோதரை செய்து அசத்த முடியும். எனவே குக்கரில் புளியோதரை சுலபமாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து வைத்து கொள்வோம்.

மேலும் படிக்க...Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்

24
Kovil Puliyotharai:

தேவையான பொருட்கள்: 

 புளி -பெரிய எலுமிச்சை பழம் அளவு,

நல்லெண்ணெய் - 3  டீஸ்புன் 

தனியா – ஒரு டீஸ்புன் 

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்புன் 

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்புன் 

 மிளகு –  ஒரு டீஸ்புன்  

சீரகம் – ஒரு டீஸ்புன் 

கடுகு – ஒரு டீஸ்புன்  

வெந்தயம் – கால் டீஸ்புன் 

 எள்ளு – ஒரு டீஸ்புன்  

 கறிவேப்பிலை – ஒரு கொத்து

வரமிளகாய் – 3

கட்டி பெருங்காயம் – 2  

 வேர்க்கடலை - ஒரு கப்  

மேலும் படிக்க...Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்

34
Kovil Puliyotharai:

செய்முறை விளக்கம்:

1. புளியோதரை செய்வதற்கு முதலில்  அரிசியை எடுத்து நன்கு அலசி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். 

2. பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி முதலில் அடுப்பில் கடாய் வைத்து, அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், முழு வேர்க்கடலை, மிளகு, சீரகம், வெந்தயம், தனியா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது மிக்ஸியில் புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன், வறுத்து வைத்துள்ள பருப்புகள், மஞ்சள் தூள் சேர்த்து பொடியாக்கி சேர்த்து கொள்ள வேண்டும். 


 

44
Kovil Puliyotharai:

3. அதில் ஊற வைத்துள்ள அரிசி, புளி தண்ணீரை கரைத்து சேர்த்து மீதம் இருக்கும் அளவிற்கு தண்ணீரை சேர்த்து உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து ஊற வைத்துள்ள அரிசியையும் சேர்க்க வேண்டும். 

4. பின்னர் குக்கரை மூடி வைத்து விடுங்கள். ரெண்டுல இருந்து மூன்று விசில் பொலபொலவென்று ரொம்பவும், சுவையான புளியோதரை தயாராகி இருக்கும். வேக வைத்துள்ள சாதத்தில் போட்டு பிசைந்து கட்டினால் சூப்பரான கோவில் புளியோதரை தயார்.

மேலும் படிக்க...Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்

Read more Photos on
click me!

Recommended Stories