Headache: காலையில் தூங்கி எழுந்திருக்கும் போது தலைவலியா..? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் அறிக..

First Published Aug 5, 2022, 6:07 AM IST

Health tips - Headache: காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி வருவதற்கான முக்கிய காரணங்களையும்  அதற்கான தீர்வுகளையும் அறிந்து கொள்ளலாம்.

Headache:

சிலருக்கு காலை எழுந்ததும் தலைவலி இருக்கும். இதனால், அன்றைய நாள் முழுவதும் அது உங்களுக்கு பிரச்சனையாக இருக்கும். சிலருக்கு காபி, டீ, குடித்த உடல் தலைவலி சரியாகும். அதனால், இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால். இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

காலையில் எழுந்ததும் ஏற்படும் தலைவலிக்கு மன அழுத்தம், நீர் சத்து பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இதற்கான தீர்வுகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

Headache:

சர்க்கரை அளவு:

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள். உங்கள் உடலில் சர்க்கரை அசாதாரணமாக இருந்தால்,  காலை தலைவலி ஏற்படலாம். இது சர்க்கரை அளவு தாறுமாறாக இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலி இருந்தால், உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.

 மேலும் படிக்க...Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்

நீரிழப்பு:

குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வருவதற்கு தண்ணீர் பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம். போதிய அளவு தண்ணீர் குடிக்காததால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வரலாம் என்று சொல்லலாம்.

Headache:

இரத்த சோகை:

உங்கள் உடலில் இரத்தத்தில் சிவப்பணு குறைவாக இருந்தால், அதாவது ஹூமோகுளோபின் குறைவாக இருந்தால், காலையில் எழுந்தவுடன் தலைவலி ஏற்படலாம். அதே நேரத்தில், உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தாலும் தலைவலியுடன் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே அடிக்கடி காலை எழுந்த உடம் தலைவலி ஏற்பட்டால், ரத்த பிரிசோதனை செய்து கொள்வது நல்லது.

 மேலும் படிக்க...Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்

Headache:

டென்ஷன்:

 இந்த தலைவலிக்கு நாம் எடுத்து கொள்ளும் உணவுகள், நாம் செய்யும் செய்யும் செயல்கள், அதே சமயம், பலருக்கு மன அழுத்தம் காரணமாகவும், தலைவலி பிரச்சனை உள்ளது. சிலர் நீண்ட நேர கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்த  இரவு ஷிப்டில் அதிகம் பணிபுரிபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலியை உணரலாம். 

ஒற்றை தலைவலி:

 இந்தத் தலைவலிக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் போது நிகழும் கண் கூசுதல், தலைசுற்றல் போன்றவை ஏற்படும். உடலுறவு மேற்கொள்ளும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்குப் பதிலடியாக உருவாகும் தலைவலி  இதுவாகும்.

Headache:

தூக்கமின்மை

தூக்கமின்மை காரணமாக காலையில் தலைவலியை உணரலாம். எனவே 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தலைவலியிலிருந்து விடுபட வலி மருந்துகளை எப்போதாவது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 மேலும் படிக்க...Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்

காலையில் தலைவலி வரும்போது செய்ய வேண்டியவை:

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும். குளிர்ந்த நீரில் பருகுவதை தவிர்க்கவும். சாதாரண நீரிலும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். காபியில் உள்ள கஃபைன் மூளை ரத்த ஓட்டத்தை பாதிக்க்கும் தன்மை உடையது. காபியை அளவோடு  சாப்பிட வேண்டும்.

click me!